அகில இலங்கை ரீதியில் நடைபெறும் பாடசாலை ஒருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டி.... மடவளை மதீனா அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி.


-Hassim Mohamed Naleem- 
இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் மற்றும் சிங்கர் ஶ்ரீலங்கா நிறுவனம் இணைந்து
அகில இலங்கை ரீதியில் நடாத்தும் 17 வயதின் கீழ் பிரிவுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் சுற்றில் மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் நமினிஓய தேசிய பாடசாலை அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

நாவுல பிரேதேச சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமினிஓய தேசிய பாடசாலை அணி முதலில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

சீரற்ற காலநிலை காரணமாக 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட கலமிறங்கிய மதீனா தேசிய பாடசாலை அணி குறிப்பிடப்பட்ட 41 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மதீனா தேசிய பாடசாலை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹாரித் கலீல் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் முன்ஷிப் பெளஸர் 73 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

270 என்ற இலக்கை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நமினிஓய தேசிய பாடசாலை அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மதீனா தேசிய பாடசாலை சார்பாக துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட ஹாரித் கலீல் 4 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  மேலும் முன்ஷிர் நிஹார் மற்றும் ஹுஸைன் இஹ்ராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
அகில இலங்கை ரீதியில் நடைபெறும் பாடசாலை ஒருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டி.... மடவளை மதீனா அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி. அகில இலங்கை ரீதியில் நடைபெறும் பாடசாலை ஒருநாள்  கிரிக்கட் சுற்றுப்போட்டி.... மடவளை மதீனா அணி  209 ஓட்டங்களால் அபார வெற்றி. Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.