முஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக! பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் .


புனித ஹஜ் பெருநாள் இந்த மாதம் 22 ஆம் திகதி கொண்டாடப்படவிருப்பதால் முஸ்லிம் அரச
ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த மாதம் 22ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் தினமாக இருப்பதால் முஸ்லிம்கள் பெருநாளைக் கொண்டாடுவதற்கு தேவையானவற்றை இப்போதே செய்ய வேண்டியுள்ளது.முஸ்லிம் அரச ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்கினால் அவர்களின் தேவையை இலகுவாக நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்.

ஆகவே,அவர்களின் நன்மை கருதி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவர்களது சம்பளத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதி அமைச்சர் பைசல் காசீம் அந்தக் கடித்ததில் கேட்டுள்ளார்.

[ பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு ]
முஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக! பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் . முஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக!  பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் . Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.