முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.


-இக்பால் அலி-
இரண்டாம் தவணைக்காக  ஓகஸ்ட் 20 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறை
புனித ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் அவர்களினால்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம்  ஒகஸ்ட் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி  விடுமுறை வழங்கி  இம்மாதம்  27 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் பதில் செயலாளர்  பி.எம். ஜி. எம். ஆர். மலீக் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
20 ஆம் திகதி வழங்கப்படயிருந்த  விடுமுறைக்கு இணங்க சகல முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் செப்படம்பர் 01 ஆம் திகதி சனிக்கிழமை நாளில்  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என்று கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளதாக  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின்  பதில் செயலாளர் மலீக் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு  ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது. Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5