முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு ஆபத்து வருமா?


முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் முஸ்லிம்களுக்குள்ளேயே உலமாக்கள்
 ஒரு தரப்பாகவும், முஸ்லிம்
சட்டத் தரனிகள் மறுதரப்பாகவும் கூட்டங்கள் கூடி களைவதை அவதானிக்க முடிகிறது.

இதன் இருதி எட்டு என்னவென்று புரிந்து கொள்ள முடியாத நிலமை நீடித்தாலும் முஸ்லிம்களே முஸ்லிம்களது உரிமைக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்ற ஐயம் வளர்ந்து கொண்டே வருகிறது.

இந்நாட்டில் முஸ்லிம் உம்மத்துக்கு உலமாக்களுக்கு ஒப்பாக முஸ்லிம் சட்டத் தரணிகளும் இன்றியமையாதவர்களே. நடப்பு காலத்தில் மேல் நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிக்கு வெற்றிடம் நிலவும் இச்சூழலில் இம்முரண்பாட்டுக்கு எவ்வாறான தீர்வு எட்டப் போகிறது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

பல்லின சமூகத்துக்கு மத்தியில் வாழும் உம்மத்தின் உரிமையைக் காக்க இணைந்து உழைக்க வேண்டிய முக்கிய இரு கரங்கள் உலமாக்களாகவும், சட்டத் தரணிகளாகவும் கருதப் படும் நிலையில், இணைந்து இருக்க வேண்டிய இரு கரங்களும் இரு துருவங்களாக முரண்பாட்டுடன் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் தொடர்ந்து வளர்த்து வரும் பகைமை சமூகத்துக்கு மிகப் பெரும் உரிமை ஆபத்தை தோற்றுவிக்கலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

சாமானியனான எனது ஆலோசனை ஒன்றே ஒன்றுதான்.

கௌரவ நீதிபதி சலீம் மர்சூக் அவர்களது தரப்பையும், மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் உற்பட்ட கௌரவ ஃபாயிஸ் முஸ்தபா அவர்களது தரப்பையும் ஒரே இடத்தில் அமர வைத்து நிதானமான கட்டம் கட்டமான கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டினை சுயநலமற்ற போதுமானதோர் குழு மிக அவசரமாக செய்ய வேண்டும்.

நடக்குமா?
உரிமை காக்கப் படுமா?

"இறைவா இறையச்சமும், நல்ல சிந்தனையும்  கொண்ட ஒரு குழுவை எழுப்பி விடுவாயாக..

இவண்:-
அபூ ஸுமையா- மடவளை பஸார்
முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு ஆபத்து வருமா? முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு ஆபத்து வருமா? Reviewed by nafees on August 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.