வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.


திருகோணமலை – தோப்பூர் , செல்வநகர் பகுதியில் லொறி ஒன்று மோதியதில் 4 வயது சிறுமி பைசர் பாத்திமா நுஹா உயிரிழந்துள்ளார்.


மூதூர் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுமி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில், சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு. வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி  மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5