இங்கிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு.. பலர் காயம்.


இங்கிலாந்து  மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


மான்செஸ்டர் நகர பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளனர்.

அந்த பகுதியில் இடம்பெற்ற கரீபியன் கார்னிவல் என்ற  திருவிழா நிறைவுக்கு வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை ஆபத்தான தாக்குதல் என மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய நேரப்படி சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் ஆயுதமேந்திய மற்றும் ஆயுதமற்ற நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் குவிந்துள்ளனர்.

எனினும் உயிர் ஆபத்துக்கள் எனவும் இதுவரையிலும் பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

திருவிழா முடிந்தமையினால் அந்த பகுதியில் பாரிய மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டினை நடத்தியவர்களை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் தகவல் பெற பொலிஸார் சிசிடீவி கமராவை சோதனையிடவுள்ளனர்.
இங்கிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு.. பலர் காயம். இங்கிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு.. பலர் காயம். Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5