இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் வகையில் அஸாம் மாநில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கவுள்ள மோடி.


-லத்தீப் பாரூக்-
இந்திய முஸ்லிம்களை எதுவுமே அற்றவர்களாக அல்லது வாழ்விடம் அற்றவர்களாக
ஆக்கும் இந்துத்துவ சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக குஜராத் முஸ்லிம் இன ஒழிப்பின் பிரதான சூத்திரதாரியும் தற்போது இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது திட்டத்தின் அடுத்த கட்டமாக அஸாம் மாநிலத்தில் உள்ள நாற்பது லட்சம் முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் திட்டத்தை அமுல் செய்யவுள்ளார். இதன் காரணமாக அந்த மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அச்சத்தை எதிர் நோக்கி உள்ளனர்.


இது மோடியிடம் இருந்தும் அவரின் பிஜேபி இடமிருந்தும் எதிர்ப்பார்க்கப்படாத ஒரு விடயம் அல்ல. பிஜேபி என்பது இந்து தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்ஷேவாக் சங் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற திட்டத்தை தமது குறிக்கோள்களில் ஒன்றாகப் பிரகடனம் செய்துள்ளனர். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள ஆயிரக்கணக்கான தாக்குதல்களின் பின்னணியில்; இவர்களும், இவர்களுக்கு ஆதரவான அமைப்புக்களுமே இருந்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நீண்ட கால வன்முறைகளின் போது அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன.


மோடி தற்போது முன்வைத்துள்ள யோசனைகளின் பிரகாரம் அஸாம் மாநிலத்தில் வாழும் மக்கள் அல்லது அவர்களது குடும்பத்தவர்கள் 1971 மார்ச் 24 க்கு முன் அங்கு வாழந்து வந்தவர்கள் என்பதை நிரூபிப்தற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேற்கப்பட்டுள்ளது. இந்த தினம் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷை பிரிப்பதற்கான யுத்தம் தொடங்கப்பட்ட தினத்துக்கு முந்திய தினமாகும்.

இந்திய குடியுரிமைக்குத் தகுதியான வசிப்பிட தினமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரஜைகளைப் பதிவு செய்வதற்கான தேசியப் பதிவகம் இல் எல்லா சமூகத்தவர்களும் தங்களைப்; பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ள போதிலும், முஸ்லிம்கள் தொடர்பான பதிவுகளைத் தரவேற்றம் செய்வதற்கான நடைமுறைகள் மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறைகளின் பிரகாரம் பலரது இந்தியப் பிரஜைகள் என்ற அடிப்படை உரிமைகள் அழிக்கப்படவுள்ளன. இது கிட்டத்தட்ட மியன்மாரில் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சமமானதாகும்.


அஸாம் மாநில அகதிகள் தங்களது தொழில்களையும் ஏனைய வளங்களையும் பறித்துக் கொண்டார்கள் என்று உள்ளுர் மக்கள் குற்றம் சாட்டத் தொடங்கியதை அடுத்து அங்கு முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான சீற்ற நிலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக அங்கு 1983ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் கூரிய ஆயுதங்கள் ஏந்திய இந்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 14 கிராமங்களில்; 2100க்கும் அதிகமான முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்.இதேவிதமான இரத்தக்களரி அஸாமில் இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் இடம்பெற்றது. இந்தக் கோரமான அழிவுகளின் விளைவாக முஸ்லிம்கள் அந்த மாநிலத்தில் 1971 மார்ச்சுக்கு முன் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் திட்டமிட்;டு அழிக்கப்பட்டன. அவர்களது பெயர் விவரங்கள் மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கப்பட்டன.
2014ல் மோடியிடம் சமஷ்டி அரச அதிகாரம் வழங்கப்படுவதற்கு முன் ஒருபோதும் இன்றைய நிலை ஏற்படுத்தப்படவில்லை. அஸாம் மாநில அரசாங்கம் அவரது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு தான் குடியுரிமை பிரச்சினையும் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள குடியுரிமை மீள் பரிசோதளை நிலை மிகவும் தெளிவற்றதாகவும் உள்ளது. இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப் போலவே இந்தியாவின் அஸாம் மரிநலத்தின் பெருமளவான மக்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களிடம் தங்களது வதிவிட ஆதாரத்தையோ அல்லது குடியுரிமை ஆதாரத்தையோ நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.இவ்வாறான மக்களுள் அதிகமானவர்கள் பெண்கள். அவர்கள் அஸாம் மாநிலத்திலேயே பிறந்தவர்கள். அங்கே திருமணம் செய்து குடும்பங்களாக அங்கே வசித்தும் வருபவர்கள். ஆனால் இவர்களிடம் இன்னமும் தங்களது இருப்பை நிரூபிப்பதற்கான போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லை. இவ்வாறான ஆவணங்கள் தமக்கு தேவை என்ற எண்ணம் கூட இவர்களுள் பலருக்கு கிடையாது.


முஸ்லிம்களை நாடற்றவர்களாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் இன் சதித்திட்டமாகவே பலரும் இதை நோக்குகின்றனர். அவ்வாறு நடந்தால் நாடற்றவர்களாகப் பிரகடனம் செய்யப்படும் மிகப் பெரிய இனக் குழுவாக இவர்கள் அமையப் போவதை தடுக்க முடியாமல் போய்விடும். 2019 முற்பகுதியில் இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அஸாம் மாநில இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்து பிஜேபி காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. அதற்கு முன் இந்த மக்களை பங்களாதேஷுக்கு நாடு கடத்துவதே அதன் திட்டமாகும். ஏற்கனவே றோஹிங்யா முஸ்லிம்களின் சுமையத் தாங்க முடியாமல் தள்ளாடும் பங்களாதேஷ் இந்த புதிய அகதிகள் பிரவேசத்துக்கு ஏற்கனவே மறுப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


முஸ்லிம்களை நீண்டகாலத்துக்கு நாடற்ற, தேச உரிமைகள் அற்ற அகதிகளாகத் தவிக்க விடப்படும் ஒரு சதித் திட்டமே இதுவென ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர். றோஹிங்யா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மியன்மார் எப்படிப்பட்ட நிலையை உருவாக்கியுள்ளதோ அதற்கு சமமான ஒரு நிலையே அஸாம் மாநில முஸ்லிம்களுக்கும் ஏற்படவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


அஸாம் மாநில முதலமைச்சர் ஷர்மா தெரிவித்துள்ள கருத்தில் 'வங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸாம் மாநில மக்களோடு இணைந்திருக்கலாம். இதுதான் பிஜேபியின் நிலைப்பாடு. அது மாற்றம் அடையவில்லை. தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ இதே நிலைதான்' என்று அவர் தெரிவித்துள்ளார்.


அஸாம் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து மத்திய கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் இந்திய சுதந்திர எழுத்தாளரான அய்ஜா சாகா செய்யித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'கடந்த நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந்தியாவின் சமய ரீதியான சிறுபான்மை குழுக்கள் மிக மோசமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். இது அங்கு இந்துத்வா ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதை உண்மையாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆளும் பிஜேபி இன் தத்துவார்த்தக் கடவுளான ஆர்எஸ்எஸ் இன் சிறந்த பாரம்பரியங்களுள் ஒன்றான காவிமயப்படுத்தலின் விரிவாக்கமும் தீவிரமும், இந்தியாவின் பாரம்பரியமான ஜனநாயக அமைப்புக்கள் வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றமையும் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. மோடியின் பிடியில் சிக்கி இந்தியக் குடியரசு அடைந்துள்ள மாற்றங்களை எம்மில் பலரால் முழுமையாகக் கிரகிததுக் கொள்ளக் கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் ஜனநாயகத் தகுதிகள் தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லிம்களுக்கு எதிராகப் பரிவாரங்கள் யுத்தப் பிரகடனம் செயதுள்ளன. முஸ்லிம்கள் மீது ஊடுறுவியவர்கள், துரோகிகள், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் கூறி பட்டப்பகலிலேயே மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே தமக்காக உரிமைக்குரல் எழுப்ப எவரும் அற்ற இந்த அப்பாவி முஸ்லிம்களை, எல்லாவகையிலும் மேலும் ஓரம் கட்டும் வகையிலான பிரசுரங்கள் மற்றும் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


தற்போது டில்லியிலும் அஸாம்மிலும் அதிகாரத்தில் இருக்கின்ற பிஜேபி இந்தியா முழுவதும் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கும் தனக்கு மிகவும் பிடித்தமான இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள். பங்களாதேஷின் வடமேற்காக எல்லையைக் கொண்டுள்ள இந்த மாநில முஸ்லிம்கள் ஒரு பேனாவின் முனையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகவும் நாடற்றவர்களாகவும் ஆக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


நாடு முழுவதும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை வாக்குரிமை அற்றவர்களாக்கி அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான ஒரு ஆரம்ப கட்ட செயற்பாடாக இந்த அச்சுறுத்தல் நிலை அமைந்துள்ளது.
தற்போது சகல முனைகளிலும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய அரசின் உண்மை நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவும் இது நோக்கப்படுகின்றது. பணவீக்க நிலை, வேலையில்லாப் பிரச்சினை, விவசாயிகளால் அரசுக்கு எற்பட்டுள்ள அழுத்த நிலை, பிரதமரின் கோடீஸ்வர நண்பர்களால் அவருக்கு எற்பட்டுள்ள சர்ச்சைகள் என பல பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு ஆயுதமாக அஸாம் மாநில குடியுரிமை விடயத்தை அரசு கையாண்டு வருகின்றது.


ஒருசில இலட்சம் மக்கள் திடீரென நாடற்றவர்கள் ஆக்கப்பட்டால் அதனால் கவலை அடையப் போவது யார்? பல தலைமுறைகளாக அஸாம்மில் வாழ்ந்த பிறகு இரவோடு இரவாக இந்த மக்கள் இருளுக்குள் தள்ளப்பட்டு எதுவும் அற்றவர்கள் ஆக்கப்படால் யாருக்கு என்ன நட்டம்?..


அஸாம் மாநிலம் எப்போதுமே அதிகளவான முஸ்லிம் சனத்தொகைக்கு உரிய ஒரு மாநிலமாக இருந்து வந்துள்ளது. பாகிஸ்தான் தனிநாட்டு போராட்டத்தின் போது முஸ்லிம் லீக் முன்வைத்த கிழக்கு பாகிஸ்தானுக்கான அசல் தேச வரைபடத்தில் ஒரு பகுதியாகவும் இது அமைந்திருந்தது. வங்காள மொழி பேசும் அஸாம் மாநில முஸ்லிம்கள் அங்கு பல தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். பிரிவினைக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்த நிலை காணப்படுகின்றது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த வங்காள மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அஸாம் மாநிலத்தின் கூலித் தொழிலாளிகளாகவும் அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் நடத்தப்பட்டு வந்த தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரிபவர்களாகவுமே இவர்கள் தமது வாழ்க்கையைத் தொடங்கினர்.
ஆனால் அதன் பிறகு இந்திய எல்லைக்குள்ளேயே பிறந்த அப்பாவிகளான படிப்பறிவு அற்ற சாதாரண மக்களின் நிலை இப்போது மிகவும் மோசமாகி உள்ளது.


அவர்களிடம் தமது குடிஉரிமையை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லை. ஆயிரக்கணக்கான மக்களின் இன்றைய நிலை இதுதான். அவர்களது கதி என்னாகும் என்பது தான் கேள்வி. டெல்லியிலும் குவாஹாத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குடைய நிர்வாகம் காணப்படுவதால் இவர்களின் நிலை பரிதாபகரமாகி உள்ளது.


இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நிலையை மேலும் மோசமாக்கி உள்ளதாகக் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. அஸாமுக்குள் பங்களாதேஷில் இருந்து ஊடுறுவல்கள் இடம்பெறுவதாக புரளியையும் அச்சத்தையும் கிளப்பி விடுவதில் மிகவும் பெயர்போன ஒரு கூட்டம்தான் பிஜேபி. தனது இனவாத ஏமாற்று நிகழ்ச்சி நிரலுக்கு ஏனைய மாநிலங்களில் ஆதரவு தேடும் நோக்கில் அவர்கள் இதைச் செய்து வருகின்றனர். அதன் 2014 தேர்தல் பிரசாரத்தின் போது மோடியும் இந்த விடயத்தைக் கையாண்டு இருந்தார். தனது தலைமையில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பங்களாதேஷில் இருந்து ஊடுறுவிய அனைவரும் அடித்துத் துரத்தப்படுவர் என்று அவர் தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கி இருந்தார்.


தனது சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் அஸாமிகள் மற்றும் அஸாமி அல்லாதோர் என பிரிவினையைத் தூண்டி முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மாபெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளார். இந்த இனவாத தூண்டலின் உச்சமாக இப்போது ஊடுறுவல்காரர்கள் என்பவர்கள் முஸ்லிம்கள் தான், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்;, அதேவேளை பங்களாதேஷில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்களை வரவேற்று ஆதரிக்க வேண்டும் என்ற நிலை அங்கு உருவாக்கப்பட்டு விட்டது.


இந்துக்கள் எங்கு பிறந்து வளர்ந்தாலும் சரி அவர்களது சாசுவதமான தாயகம் இந்தியா தான் என்ற உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இது அஸாமிலும் ஏனைய இந்திய மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஆச்சரியத்துக்கு ஆளாக்கி உள்ளது. தமது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தும் கூட அந்த நாட்டை தமது நாடு என்று சொல்லிக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்து ராஜ்ஜியம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தையே இது ஏற்படுத்தி உள்ளது.


மோடியும் அவரது இனவாத காடையர்கள் குழுவும் எவ்வளவுதான் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வரலாற்றை யாரும் மாற்றி எழுதி விட முடியாது. இன்று பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள இந்தியாவை உருவாக்குவதில் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றான கொயின்கா குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி கொயின்கா என்பவர் 2017 அக்டோபர் 31ல் மாநில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


'முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இந்தியா மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 27 வீதத்தை அது தன்னகத்தே கொண்டிருந்தது. முஸ்லிம்கள் இந்த நாட்டை ஒரே தேசமாக ஒன்றிணைத்தனர். இந்த நாட்டுக்கொரு தனிததுவத்தையும் அவர்கள் ஏற்படுத்தினர். சுமார் அயிரம் வருடங்களுக்கு முன் முஸ்லிமகள் இந்தியாவுக்குள் வருகை தர முன் இந்தியா துண்டு துண்டாக பிளவுபட்ட, ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தோடு சண்டையிடடுக் கொண்டிருந்த ஒரு நாடாகத் தான் இருந்தது. உலகின் மிகவும் பெறுமதிமிக்க கட்டிடக் கலை அம்சங்களை இந்தியாவுக்கு முஸ்லிம்கள் தான் அளித்தனர். இந்தியாவுக்கு கல்வி முறையையும் அவர்கள் தான் அறிமுகம் செய்தனர். முஸ்லிமக்ளின் வருகைக்கு முன் இந்தியா பற்றி ஐதீகக் கதைகள் தான் இருந்தன. அவர்களின் வருகைக்கு பின்னர் தான் இந்தியாவுக்கான பதிவு செய்யப்பட்ட வரலாறே தொடங்குகின்றது.


11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை முஸ்லிம் நாடுகள் உற்பட உலகின் அரைவாசிப் பகுதி மங்கோலியர்களாலும் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களாலும் சூறையாடப்பட்டு வந்த வேளையில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தீவைப்பு என அநியாயங்கள் உலகில் தலைவிரித்து தாண்டவம் ஆடிய போது முஸ்லிம்கள் தான் தமது உயிர்களைத் தியாகம் செய்து அவற்றுக்கு எதிராகப் போராடினர். மங்கோலியர்களின் அழிவில் இருந்து இந்தியாவையும் காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். இதுவே அவர்கள் இந்தியாவுக்கு செய்துள்ள மிகப் பெரிய சேவையாகக் கருதப்பட வேண்டியதாகும்.


 இந்துத்வா வாதிகள் இவற்றை எல்லாம் இன்று மறந்து விட்டனர். 200 வருடங்களுக்கு மேலாக இந்தியாவை சூறையாடிய பிரிட்டிஷ் கொள்ளையர்களை அவர்கள் மறந்து விட்டனர். உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 27 வீதத்தை கொண்டிருந்த இந்தியாவை வெறும் நான்கு வீதத்துக்கும் குறைவாக ஆக்கியவர்கள் அவர்கள் தான். பிரிட்டிஷ் கொள்கைகள் நாற்பது லட்சம் இந்திய மக்களின் உயிர்களைக் காவு கொண்டுள்ளது. பிரித்தாளும் அவர்களின் ராஜதந்திரக் கொள்கையைத் தான் இன்றைய பிஜேபி பின்பற்றுகின்றது. உண்மையில் முஸ்லிம்கள் தான் இந்தியாவை உருவாக்கியவர்கள்'.


இந்த நேர்காணலுக்கு மேலதிகமாக மெல்பேர்ன் நகரில் வைத்து யுடீஊ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் பிரபல ராஜதந்திரி சசி தரூர் 2017 அக்டோபர் 27ல் தெரிவித்துள்ள கருத்தில் 'இந்தியாவின் காலணித்துவத்துக்கு முந்திய பொருளாதாரம் முகலாயரின் ஆட்சியின் கீழ் சுபிட்சத்துக்கான பொற்காலமாகத் திகழ்ந்தது. இது உலக மொத்த தேசிய உற்பத்தியில் 27 வீதமாகக் காணப்பட்டது. என்னைப் பொறுத்தமட்டில் பிரிட்டிஷ் காரர்களைப் போல் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு அந்நியர்கள் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா 1200 வருடங்களாக வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது என்ற இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துக்கு நேரடியான எதிர்க் கருத்தாக இது அமைந்துள்ளது.


பிரிட்டனுக்கு எதிரான இந்திய சுதந்திரப் பேராட்டத்தில் மகாத்மா காந்திக்கு பக்கபலமாக இருந்து மௌலானா அப்துல் கலாம் போன்ற பெருந்தலைவர்கள் போராடிய போது ஆர்எஸ்எஸ் எங்கே இருந்தது. உண்மையான இந்து மதத்தை பிரதிநிதித்துவம் செய்யாத இந்த ஆர்எஸ்எஸ் பொருளாதார நன்மைகளுக்காக பிரிட்னுடன் கைகோர்த்து நின்றது என்பது தான் உண்மையான இந்திய வரலாறாகும்.


'இந்தியா சுதந்திரத்தை வென்றது' என்ற தனது நூலில் மௌலானா அப்துல் கலாம் ஆஸாத் சுதந்திர போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் இன் துரோகம், ஏமாற்று வித்தைகள், குற்றங்கள் என்பன பற்றி விரிவாக விளக்கி உள்ளார்.
செல்வந்த வர்த்தகர்களாலும், தொழில் அதிபர்களாலும் பிராமணர்களாலும் இஸ்ரேலியர்களாலும் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களால் பதவியில் அமர்த்தப்பட்ட இன்றைய மோடி அரசு இந்தியாவை இருண்ட யுகத்தை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. இன்றைய இந்திய அரசுக்கு வழங்கி வரும் சகலவிதமான ஆதரவுகளுக்கும் அப்பால் இஸ்ரேல் 280 கோடி ரூபா நிதி உதவிகளையும் வழங்கி உள்ளது. ஆர்எஸ்எஸ் உம் மோடியும் இந்தியாவை ஆளும் வரை இந்தியாவுக்கு எதிரிகளே தேவை இல்லை. காரணம் அவர்கள் சமூகங்களைப் பிளவு படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தி ஒரு மாபெரும் தேசத்தை இந்துத்துவா இனவாத அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றனர்.
இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் வகையில் அஸாம் மாநில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கவுள்ள மோடி. இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் வகையில் அஸாம் மாநில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கவுள்ள மோடி. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5