நல்லாட்சியா? நரியாட்சியா?


கடந்த வெள்ளிக்கிழமை நீண்ட தூரம் பயணம் ஒன்று செல்வதற்காக இ.போ.ச வின் பஸ்
வண்டியில் ஏறினேன்.

புகையிரத சேவையினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பஸ்ஸில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இலக்கை சென்றடைவதற்கு 6 மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்ஸில் ஒரு மத போதகர் ஏறினார் அப்போது மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்று மத இளைஞ்ஞர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

மதபோதகரை கண்டதும் இளைஞ்ஞன் எழும்பி ஆசனத்தை கொடுக்காத்தால், மத போதகர் உரத்த தொனியில் கண்ணாடில் ஒட்டப்பட்டிருந்த வாசகத்தை வாசிக்குமாறு கூறினார் அவ்விளைஞன் அதனை வாசித்தான் அதில் “மத குருமார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என இருந்தது.


அதனை வாசித்த இளைஞன் ஆசனத்தை கொடுத்துவிட்டு எழும்பி ஆறு மணித்தியால பயணத்தையும் நின்று சென்றான். அவ்வாசகமானது இலங்கை நாட்டில் வாழும் பல்லின மத குருமார்களுக்கும் பொதுவானது என்பது நாம் யாவரும் அறிந்ததே ஆனால் குறித்த நிறத்தினாலான ஆடை அணிந்த மத குருமார்களுக்கு மட்டுமே அச்சட்டமானது சாதகமாக அமைகின்றது ஏனைய மத குருமார்களுக்கு செல்லுபடியற்றதாகவே காணப்படுகின்றது.


இவ்வாறே நாங்கள் கடந்த சில தினங்களாக “ஞானசார தேர” எனப்படும் மத குருவைப்பற்றி அடிக்கடி செய்திகளில் கேட்கிறோம் , பார்க்கிறோம் , படிக்கிறோம். குறித்த மத குருவிற்கு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி ஆறு வருட கால சிறைத்தண்டனை வழங்கி இருக்கின்ற நிலையில் ஒரு சில அமைச்சர்களும் , அவரையொத்த மத குருக்களும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் , மஹாநாயக தேரர்களின் உதவி இருந்தால் பொதுமன்னிப்பு வழங்க சாத்தியம் உள்ளதாகவும் பல்வேறு பட்ட கருத்துக்கள் உலாவுகிறது.


இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்குமா?

இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான விடயங்கள் ஏனைய மதங்களின் மத குருமார்களாக இருந்தால் சாத்தியமாகுமா? கடந்த அரசாங்கத்தைப் போன்றே நல்லாட்சி அரசாங்கமும் நாடகமாடப்போகின்றதா? போன்ற பல்வேறு பட்ட கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றது.


ஆக இதற்காக வழங்கப்படும் தீர்பினைக் கொண்டு இவ்வாட்சியானது நல்லாட்சியா? நரியாட்சியா? என மக்கள் முடிவெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ARN - Maruthamunai.
நல்லாட்சியா? நரியாட்சியா? நல்லாட்சியா? நரியாட்சியா? Reviewed by Madawala News on August 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.