நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது- பிரதமர்



தற்போதைய அரசாங்கம் மக்கள் நேய அரசாங்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒரு அரசாங்கமே தற்போது இருக்கின்றது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாடு பூராகவும் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிவேகப் பாதைக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படுகின்றது. புதிய வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்.

'கம்பெரலிய' 'கிராம சக்தி', 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' ஆகிய வேலைத்திட்டங்கள் மூலம் இந்த அபிவிருத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நேற்று கேகாலை மாவட்டத்தில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் ஆயிரத்து 364 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

பிரதமர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், கம்பெரலிய மற்றும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டங்களை அபிவிருத்தி முயற்சிகளை மேலும் பலப்படுத்தியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் உரையாற்றினார். ஒரு காணித்துண்டுக்கான உரிமை அனைத்து பிரஜைகளுக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது- பிரதமர் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது- பிரதமர் Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.