அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி... மடவளை மதீனா அணி, இப்பாகமுவ அணியை வென்று 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது..


- Hassim Mohamed Naleem-
இலங்கை பாடசாலைகள் கிரிகெட் சம்மேளனம் மற்றும் சிங்கர் ஶ்ரீலங்கா நிறுவனம் இணைந்து அகில இலங்கை
ரீதியில் நடாத்தும் 17 வயதின் கீழ் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் சுற்றில் மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் இப்பாகமுவ மாதிரி பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று அக்குரனை அஸ்ஹர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இப்பாகமுவ மாதிரி  பாடசாலை அணி முதலில் பந்து வீசும் வாய்ப்பை தனதாக்கிக் கொண்டது.

48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மதீனா தேசிய பாடசாலை அணி நிர்னயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும்  இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 மதீனா தேசிய பாடசாலை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணியின் தலைவர் முன்ஷிப் பெளஸர் 89 பந்துகளை எதிர்கொண்டு 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

203 என்ற இலக்கை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய இப்பாகமுவ மாதிரி பாடசாலை அணி 37 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மதீனா தேசிய பாடசாலை சார்பாக பந்து வீச்சில் சஹ்ல் பெளஸர் 9 ஓவர்கள் பந்து வீசி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அஹ்மட் மற்றும் முன்சிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி 54 ஓட்டங்களால் இப்போட்டியில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றியின் மூலம் மடவளை மதீனா தேசிய பாடசாலை ஆணி இப்போட்டித் தொடரின் 3ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி... மடவளை மதீனா அணி, இப்பாகமுவ அணியை வென்று 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.. அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி... மடவளை மதீனா அணி, இப்பாகமுவ அணியை வென்று  3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.. Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.