பதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு.


பதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பகங்கள் விற்பனை செய்யும் விற்பனை
நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை (12) இரண்டு மாடிகட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வியாபார நிலையத்தில் இருந்த நபர் பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பதுளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு. பதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5