118 பேரின் பெயர் விபரத்தை வெளியிட முடியாது-சட்ட மா அதிபர்



மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி
விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை வெளியிடுவதனால், தற்பொழுது நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என சட்ட மா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து விடுத்திருந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவித்தலை சட்ட மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர் விபரம் உள்ளதாகவும், இதனைப் பெற்றுத் தருமாறும் சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சட்ட மா அதிபரிடமும் ஜனாதிபதி செயலாளரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

118 பேரின் பெயர் விபரத்தை வெளியிட முடியாது-சட்ட மா அதிபர்  118 பேரின் பெயர் விபரத்தை வெளியிட முடியாது-சட்ட மா அதிபர் Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.