தப்பியோடிய விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது



ஓட்டோ ஒன்றில் விடுதலை புலிகளின் சீருடை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டுச் சென்று,
பின்னர் தப்பியோடிய விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலை புலிகள் அமைப்புக்கு சொந்தமான சீருடை, கொடி, கிளைமோர் குண்டு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்ற ஓட்டோ ஒன்று அண்மையில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின்போது சிக்கியது. இதன்போது, ஓட்டோ சாரதி உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், நபர் ஒருவர் தப்பியோடியிருந்தார்.
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் களமிறக்கப்பட்டிருந்தது.
இறுதி யுத்தத்தின்போது இடது கையை இழந்துள்ள 41 வயதுடைய வெள்ளசாமி என்பவர் இச்சம்பவம் தொடர்பில் ​கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது தப்பியோடிய விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.