பிறை‌ பார்க்கும் மாநாடு ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற‌ வேண்டும் என்பதை ப‌கிர‌ங்க‌மாக‌ கூறியவர்கள் நாங்களே ; உலமா கட்சி ..



பிறை ப‌ற்றிய‌ தீர்மான‌ கூட்ட‌ம் கொழும்பு பெரிய‌ ப‌ள்ளிவாய‌லில் கூடிய‌ ஏற்ப‌ட்ட‌ கூச்ச‌லும் குழ‌ப்ப‌மும்
முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அவ‌மான‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து என‌ த‌ற்போது ஞான‌ம் வ‌ந்து பேசுவோர் தொட‌ர்ந்தேற்சியாக‌ இதே குழ‌ப்ப‌ங்க‌ள் ந‌டை பெற்ற‌ போது வாய்மூடி இருந்த‌வ‌ர்க‌ள்தான்.

பிறை பார்க்கும் தீர்மான‌ம் கொழும்பு பெரிய‌ ப‌ள்ளிவாய‌லில் கூடுவ‌தால் ப‌ள்ளி நிர்வாக‌ம் உல‌மாக்க‌ள் அல்லாதோரை பெருவாரியாக‌ கொண்டிருப்ப‌த‌னாலும் அங்கும் உல‌மா அல்லாத‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொள்வ‌தால் கூச்ச‌மும் குழ‌ப்ப‌மும் ஏற்ப‌டுவ‌து புதிய‌ ஒன்ற‌ல்ல‌.

ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் அ. இ. ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் செய‌லாள‌ராக‌, துணிச்ச‌ல்மிக்க‌ உல‌மாவான‌ மௌல‌வி எம் ஜே எம் ரியாழ் இருந்த‌ போது இவ்வ‌றான‌ பிறை பிர‌ச்சினை ஏற்ப‌ட்ட‌ போது பிறை காண‌ப்ப‌ட்ட‌து உண்மை என்ப‌தால் அத‌னை உல‌மா ச‌பை ஏற்கிற‌து என‌ கூறிய‌ போது கொழும்பு பெரிய‌ ப‌ள்ளிவாய‌லில் வைத்து அவ‌ர் தாக்க‌ப்ப‌ட்டார்.

அத‌னை உல‌மா க‌ட்சியின‌ராகிய‌ நாம் ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்த‌தோடு  எதிர்கால‌த்தில் பிறை ப‌ற்றிய‌ மாநாடு ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற‌ வேண்டும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ கூறினோம்.

ஆனால் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கு சாஷ்டாங்க‌ம் செய்யும் த‌லைமை இத‌னை ஏற்காத‌த‌ன் விளைவே இத்த‌க‌ய‌ கூச்ச‌லும் குழ‌ப்ப‌முமாகும். இன்று இத‌னை சுட்டிக்காட்டும் ந‌ளீமிக‌ள் கூட‌ அன்று எம‌து க‌ருத்துக்கு ஆத‌ர‌வ‌ளிக்காம‌ல் இருந்து விட்டு இப்போது ச‌ட்டி சுட்ட‌த‌டா கை விட்ட‌த‌டா என‌ புல‌ம்ப்புகிறார்க‌ள்.

எம்மை பொறுத்த‌வ‌ரை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌ம் மாற்றிய‌மைக்க‌ப்ப‌டாம‌ல் இனி அத‌ன் த‌லைமைய‌க‌த்தில் பிறை மாநாடு ந‌ட‌ந்தாலும் ந‌ம்ப‌ முடியாது என்ற‌ நிலைதான் வ‌ந்துள்ள‌து. 

இத‌ற்கு ப‌ரிகார‌மாக‌ பிறைக்குழுவில் கொழும்பை மைய‌ப்ப‌டுத்திய‌ சில‌ இய‌க்க‌ங்க‌ளை உள் வாங்க‌ வேண்டும் என‌ சில‌ர் சொல்கின்ற‌ன‌ர். அந்த‌ இய‌க்க‌ங்க‌ள் அனைத்துமே கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் இய‌க்க‌ங்க‌ளாகும். கிழ‌க்கு ம‌க்க‌ளில் ஒருவ‌ரைக்கூட‌ த‌லைமைப்ப‌த‌வியில் நிறுத்த‌ முடியாத‌ மேலாதிக்க‌ சிந்த‌னை கொண்ட‌வ‌ர்க‌ளாகும். அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் சேர்ந்து பிறைக்க‌மிட்டி அமைத்தாலும் அவ‌ர்க‌ள் கிழ‌க்கில் காண‌ப்ப‌டும் பிறையை இல‌குவில் ஏற்க‌மாட்டார்க‌ள். ஆக‌வேதான் நாம் பின்வ‌ரும் விட‌ய‌ங்க‌ளை ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌  முன் வைக்கிறோம்.

1. ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் தொட‌ர்ந்தும் மூன்று த‌ட‌வைக்கு மேல் த‌லைவ‌ராக‌ இருக்க‌ முடியாது என்ற‌ ச‌ட்ட‌த்தை ஜ‌ம்மிய்யாவின் யாப்பில் சேர்க்க‌ வேண்டும்.

2. மாகாண‌ அடிப்ப‌டையில் கிழ‌க்கு மாகாண‌த்திலேயே அதிக‌ முஸ்லிம்க‌ளும் அதிக‌ உல‌மாக்க‌ளும் உள்ள‌தால் கிழ‌க்கில் "கிழ‌க்கில‌ங்கை ஜ‌ம்மிய்ய‌துல் உலமா ச‌பை" ஒன்று ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3. கிழ‌க்கிலேயே அதிக‌ம் பிறை பார்க்க‌ப்ப‌டுவ‌தால் அத‌னை தீர்மாணிக்கும் அதிகார‌ம் கொண்ட‌ பிறைக்க‌மிட்டி அர‌சாங்க‌த்தால் கிழ‌க்கில் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

4. அனைத்து த‌வ்ஹீத்வாதிக‌ளும் ஸ்ரீ ல‌ங்கா த‌வ்ஹீத் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து ஒற்றுமைப்ப‌ட‌ வேண்டும்.

5. அம்பாரை மாவ‌ட்ட‌ அனைத்து த‌வ்ஹீத் ப‌ள்ளிவாய‌ல் ச‌ம்மேள‌ன‌ம் உருவாக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

6. பிறை பிர‌ச்சினை இப்ப‌டியே  தொட‌ருமாயின் நோன்பு, ஹ‌ஜ், மாத‌ங்க‌ளை தீர்மானித்த‌ல் போன்ற‌வ‌ற்றில் ம‌க்கா பிறையை அனைவ‌ரும் ஏற்க‌ வேண்டும். இதுவே நூறுவீத‌ ஒற்றுமைக்கு வ‌ழி.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி
பிறை‌ பார்க்கும் மாநாடு ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற‌ வேண்டும் என்பதை ப‌கிர‌ங்க‌மாக‌ கூறியவர்கள் நாங்களே ; உலமா கட்சி .. பிறை‌ பார்க்கும் மாநாடு ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற‌ வேண்டும் என்பதை ப‌கிர‌ங்க‌மாக‌ கூறியவர்கள் நாங்களே ; உலமா கட்சி .. Reviewed by Madawala News on June 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.