கல்முனையன்ஸ் போரத்தின் முன்மாதிரியான ஸதகதுல் ஃபித்ர் - 2018 செயற்திட்டம்.


(எம்.என்.எம்.அப்ராஸ்)
வருடந்தோரும் கல்முனையன்ஸ் போரமின் செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்
ஸதகதுல் ஃபித்ர் செயற்றிட்டம் இம்முறையும் இறைவனின் உதவியால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

ரமழானின் ஆரம்ப பகுதியில் பகிர்ந்தளிக்கப் பட்ட சுமார் 150 உண்டியல்கள் மூலமாக சேகரிக்கப்பட்டபணம் மூலம்,மற்றும் நிதி அன்பளிப்பாகவும் மற்றும் பொருளாகவும் பெறப்பட்டவற்றை கொண்டும் தேவையுடைய 130  குடும்பங்களுக்கான  உணவுப்பொதிகள் கடந்த புதன் (13) மற்றும்   வியாழன்(14) கிழமையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுப்பொதியில்
அரிசி 5Kg
கோழி 1Kg
தேங்காய் 01
மரக்கறி பொதி (கரட், தக்காளி, உருளைக்கிழங்கு, கொச்சிக்காய், வெங்காயம்)
சீனி 2Kg
கஸ்டர்ட் 02
ஜெலி 01
பால்டின் 01
போன்ற பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட தேவையான பொருட்கள் உள்ளடங்கியிருந்தது.

மேலும் சிறுவர், பெண்கள் என சுமார் 23 நபர்களுக்கு தேவையான புத்தாடைகளும் வாங்கி கொடுக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது

மேற்படி செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு செய்து பல உள்ளங்களில் மகிழ்ச்சியை விதைத்த எல்லா நல்லுள்ளங்களுக்கும் கல்முனையன்ஸ் போரத்தினர் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.
கல்முனையன்ஸ் போரத்தின் முன்மாதிரியான ஸதகதுல் ஃபித்ர் - 2018 செயற்திட்டம். கல்முனையன்ஸ் போரத்தின் முன்மாதிரியான ஸதகதுல் ஃபித்ர் - 2018 செயற்திட்டம். Reviewed by Madawala News on June 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.