திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இது...


(அப்துல்சலாம் யாசீம்)
30 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்  51  வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை
   குற்றமற்றவை என திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்  சுவாரஸ்யமான வழக்கொன்று  இன்று செவ்வாய்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த  இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு கன்தளாய்   வான்எல பகுதியைச்சேர்ந்த 30 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர்  அதே இடத்தைச்சேர்ந்த ஜம்பத்தொரு வயதுடைய பெண்னொருவரை வல்லுறவுக்குற்படுத்தியதாக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

 குறித்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்பட்ட பெண் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி  பொலிஸ் விசாரணை அதிகாரி என்போர் சாட்சியமளித்தனர்.

எதிரி அளித்த சாட்சியத்தை தொடர்ந்து மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுநர் தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு என்பிக்கப்படாத நிலையில் குறித்த பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் எதிரி உடல் தொடர்பினை கொண்டிருந்தமை என்பிக்கப்பட்ட நிலையில் குறித்த எதிரி  குற்றமற்றவர் என காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் தமது  தேவையை  பூர்த்தி செய்வதற்காக 30 வயது இளைஞனை பயன்படுத்தி வந்த நிலையில்  குறித்த விடயம் வௌித்தெரிந்த நிலையில் குறித்த இளைஞன் தம்மை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண்மணி முறையிட்டுள்ளதாகவே நீதிமன்றம் கண்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இது... திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்  இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இது... Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5