கண்டி வன்முறை... பாதிக்கப்பட்ட 280 சொத்துகளின் உரிமையாளர்களுக்கு 88 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு.


ஏ.ஆர்.ஏ.பரீல்-
கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட 280 சொத்துகளின் உரிமைகளுக்கு 88 இலட்சம் ரூபா நஷ்ட
ஈடாக நேற்று முன் தினம் வழங்கப்பட்டது.

கண்டி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடை பெற்ற நிகழ்வில் இந்த நஷ்டஈடு பகிர்ந்தளிக் கப்பட்டது.
இது இரண்டாம் கட்ட மாக வழங்கப்பட்ட நஷ்டஈடாகும்.

ஒரு இலட்சம் ரூபாவுக்கு குறைவான நஷ் டங்களுக்குள்ளான சொத்துக்
களுக்கே இந்த நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி 125 ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நஷ்டங்களுக் குள்ளான சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டன.

ஒரு இலட்சத்துக்கும் 5 இலட்சத்துக்கும் உட்பட்ட நஷ்டங்களுக்குள்ளான சொத்துகளுக்கு நஷ்டஈ டுகள் அமைச்சரவையின் அங்கீகாரத்தினை பெற். றுக்கொண்டே வழங்கப்பட வுள்ளன.

அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்ப டவுள்ளதாக புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி, மீள்கு டியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

5 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நஷ்டங்களுக் குள்ளான சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக அதற்கான மதிப்பீடுகளைச் செய்வதற்கு அமைச்சு குழுவொன்றினை நியமித் துள்ளது.

அக் குழுவின் சிபார்சுகளுக்கமைய இந்த நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன.

கண்டி வன்முறை... பாதிக்கப்பட்ட 280 சொத்துகளின் உரிமையாளர்களுக்கு 88 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு. கண்டி வன்முறை... பாதிக்கப்பட்ட 280 சொத்துகளின் உரிமையாளர்களுக்கு  88 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5