MBS படுகொலை? செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு சவுதி அரேபியா மறுப்பு




சவுதியின் முடிக்குறிய  இளவரசர் முஹம்மது பின்  சல்மான் தொடர்பில் பரவும் செய்திகளுக்கு
சவுதி அரேபியா மறுப்பு வெளியிட்டுள்ளது.

முஹம்மது பின்  சல்மான் கடந்த மாதம் 21 ஆம்தேதிக்கு பின்னர் இதுவரை பொதுவெளியில் எங்கும் காணப்படவில்லை எனவும், அரச குடும்பத்தில் அவருக்கு எதிரானவர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அல்லது ஆளில்லாத விமான தாக்குதலில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரலாம் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த தகவல் சவுதி முழுக்க தீயாக பரவிய நிலையில், குறித்த யூகங்களுக்கு சவுதி அரச குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பட்டத்து இளவரசர் சல்மானின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள அரண்மனை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பட்டத்து இளவரசருக்கு எதிரணியில் இருப்பவர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும், இந்த தாக்குதலில் பட்டத்து இளவரசர் சல்மான் கைது செய்யப்பட்டு ரகசிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஈரான் ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியிருந்தன.

இந்த நிலையில் சவுதியின் முடிக்குறிய  இளவரசர் முஹம்மது பின்  சல்மான் தொடர்பில் பரவும் செய்திகளுக்கு சவுதி அரேபியா மறுப்பு வெளியிட்டுள்ளது.
MBS படுகொலை? செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு சவுதி அரேபியா மறுப்பு MBS  படுகொலை? செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு  சவுதி அரேபியா மறுப்பு Reviewed by Madawala News on May 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.