திகனயில் கலவரம் ஏற்பட வாப்புள்ளதால், பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்: அமித் வீரசிங்க.


(ஏ.ஆர்.ஏ. பரீல்) 
திகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு
உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்கவை கோரியுள்ளார்.

இதனாலேயே கலவரம் நடைபெற்ற பகுதிக்கு தான் சென்றதாக அமித் வீரசிங்க தெரிவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறினார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைமைக்காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

 “மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்க தெரிவித்துள்ள கருத்து உண்மையானதா? இல் லையா? என்பது அவருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபருக்குமே தெரியும்.

ஆனால் இக் கருத்து உண்மையா? பொய்யா? என்பதை அவர்களிருவரிதும் கையடக்க தொலைபேசியின் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
|
அதனால் இது தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றினை நடத்துமாறு பொலிஸ் மா அதி பரை வேண்டிக் கொள்கிறோம்.

திகன பிரதேசத்தில் இடம் பெற்ற கலவரங்கள் தொடர்பில் பொலிஸார் 129 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 105 பேர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள் ளார்கள்.

அவர்கள் மீது இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை . வழக்கு தொடர்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாதுள்ளது. மஹசொன் பலகாய அமித் வீரசிங்க அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட் டுள்ளார்.

கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் திகனயில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி வேண்டிக் கொண்டதனாலேயே தான் அங்கு சென்ற தாகவும் அமித் வீரசிங்க கூறு கிறார். 

எனவே இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுயாதீன விசாரணையொன்றினை நடத்த வேண்டும்.


ஆரச்சி கும்புரே சோபித தேரர் கலவரம் இடம்பெற்ற போது மரண வீடொன்றுக்குச் சென்று ஊரடங்குச் சட்டம் ) அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாது அமித் வீரசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது வீட்டில் தங்கியிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

 அமித் வீரசிங்கவின் வீட்டிலிருந்த ஏனைய ஆண் களும் கைது செய்யப்பட்டுள் ளனர்.

சோபித தேரரின் வயிற்றில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தாக்கியிருக்கிறார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழு வுக்கு முறைப்பாடு செய்துள் ளார்கள்.

 ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இதுவரை விசா ரணை எதுவும் மேற்கொள்ள வில்லை. தற்போது பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடு வதற்கு அவர்கள் தீர்மானித் துள்ளார்கள்.

 ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் நீதி நிலைநாட்டப்படுமா? எனத் தெரியவில்லை . பொலிஸ் ஆணைக்குழு கூறுபவைகளை பொலிஸ் மா அதிபர் கேட்பதில்லை என ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் பொலிஸ் ஆணைக்குழு மூலம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றார்.

திகனயில் கலவரம் ஏற்பட வாப்புள்ளதால், பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்: அமித் வீரசிங்க. திகனயில் கலவரம் ஏற்பட வாப்புள்ளதால், பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்: அமித் வீரசிங்க. Reviewed by Madawala News on May 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.