மாட்டுப் பிரச்சினையும், முஸ்லிம் மாற்றுத் தீர்வும்...


இலங்கையில் அடிக்கடி மாடுகள் தொடர்பான அக்கறையும், அதற்கான எதிர்வினைகளும் இடம்பெறுவதை அவதானிக்க முடியும்,
குறிப்பாக இலங்கை முஸ்லிம் களிடையே "மாட்டிறைச்சி" தொடர்பான அக்கறை அதிகம் காணப்படுகின்ற அதே வேளை அதுவே, அதனை எதிர்ப்போரின் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகின்றது, சமூகங்களுக்கிடையேயும், சமயங்களுக்கிடையேயும் பிளவுகளையும், தப்பபிப்பிராயங்கையும் உருவாக்குவதில் இம் " மாடுகள்" தொடர்பான விடயங்கள் முன்னணி வகிக்கின்றன, சில வேளைகளில் அவை மனிதர்களைக்கொல்லும் அளவிற்கும் விரிவடைந்து செல்கின்றன.

மாமிச தொடர்பு,..

குறிப்பாக  அறபு, மற்றும் வளைகுடா நாடுகளில் தோற்றம் பெற்ற சமயங்களில் இம்மாமிச உணவுப் பிரியத்தை அவதானிக்க முடியும், கீழைத்தேய பௌத்தம், இந்து சமயங்கள் இவற்றில் அதிக அக்கறை எடுக்கவில்லை, பாலைவனங்களில் தாவர உணவுகளை விட விலங்குணவு, கிடைப்பனவிலும், போசாக்கிலும், முன்னணி வகித்ததனால் இந் நிலை தோன்றி இருக்கலாம், ஆனாலும்,  அங்கு அதிகமாக ஒட்டகங்களே இதற்கு  இரையாகின.

இலங்கையும் , மாடுகளும்,

இலங்கையின் பிரதான சமயமான பௌத்தத்தில் "எல்லா உயிர்களைப்" போலவே மாடுகளும் கவனிக்கப் படுகின்றன, ஆனாலும் இந்து சமயத்தில் இதன் நிலை சற்று உயர்வானது, ஆனாலும் இவற்றினை பின்பற்றுவோரில் 'சிலர்' சமயத்தை விட மாடுகளை வைத்து இன்னொரு சமுகத்தை , குறிப்பாக முஸ்லிம்களைத் தாக்குவதற்கே  அதிகம்ப யன்படுத்திக் கொள்கின்றனர். அது ஆரோக்கயமற்றது மட்டுமல்ல, மாடுகளின் "சமயப் புனித்த்தை" பிழையாகப் பயன்படுத்துவதாகவும் அமைந்துவிடும்,

பிரயோசனம்,

இலங்கையின் கிராமப் பொருளாதாரத்தில்  மாட்டுப் பொருளாதாரம் மிக முக்கியமானது, மட்டுமல்ல விவசாயத்திற்கும் , பால் பெறுவதற்கும் இம் மாடுகள்ள்  அதிக பயனளிக்கின்றன. ஆனாலும் காளை மாடுகள் வண்டி இழுக்கும் நிலை தற்போது மாறி ,இயந்திரங்களிடம் சென்றடைந்துள்ளமையால் ,அவற்றினை அறுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது, ஆனாலும்  உரிய காரணமின்றி பலன்தரு நிலையில் உள்ள பசுக்களை அறுப்பது கண்டிக்கத்தக்கதே!

தீர்வுகள் முஸ்லிம்களிடமே.

இறைச்சி  சாப்பிடுவதில் எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவரகளும் பங்கு பற்றினாலும், மாடறுப்பு, விற்பனை  மாட்டுப் பிரச்சினை  வரும் போது அவற்றை  முஸ்லிம்களின் தலையில் மட்டும்   போட்டுவிட்டு தப்பி விடுகின்றனர், ..........அதே நேரம் , மாடறுப்பு  விற்பனை என்பனவற்றில் முஸ்லிம்களும் சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச் சாட்டுக்களும் உண்டு.

தீர்வுகள் என்ன ..? எப்படி?

மாடறுப்பு தொடர்பான பிரச்சினைகளில் மிக முக்கியபானது , மாடுகளை ஏற்றி இறக்குதலும், அவற்றுக்கான அனுமதி வழங்கலுமாகும், இதனை அவ்வப் பிரதேச மிருக வைத்தியர்களே ( VS) மேற்கொள்ளுகின்றனர், அவர்களது கட்டுப்பாட்டிலேயே இவை  அனைத்தும் உள்ளடங்கி உள்ளது,  ஆனால்  முஸ்லிம்களில் மிருக வைத்தியத்துறையில் வைத்தியராக்க் கடமை புரிவோரின் எண்ணிக்கை  மிக்க குறைவானதே, இதுவும் இப்பிரச்சினை தீவிரமடையக் காரணமாகும்

சில இஸ்லாமிய  சமயவாதிகளின் மிருக வைத்தியம் தொடர்பான தப்பான விளக்கங்களும்  இதில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றது,
உ+ம்.. நாய்களை தொட்டு வைத்தியம் செய்தல்  தொடர்பான பிழையான விளக்கம்,
இந்த தப்பபிப்பிராயங்கள் காரணமாக மிருக வைத்தியத்துறைக்கு University தெரிவான மாணவர்களும் அதைவிட தர மட்டத்தில் குறைவான Bsc போன்ற கற்கைகளுக்கு மாறிச் செல்கின்றனர். University of Peradeniya வில்  இந் நிலையை காணலாம்,  இது இத்துறை சார் இடைவெளியை உண்டு பண்ணுவதோடு மட்டுமல்லாமல், சமூகச் சூழலில் மாட்டைப் புனிதமாக்க் கருதும் சமூகங்களைச் சார்ந்த வைத்தியர்கள்  அதனை  இறைச்சிக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் வேண்டுமென்றே  தடைகளை உண்டு பண்ணவும்  இது வாய்ப்பாகி விடுகின்றது.    இதில் இருந்து விடுபட

1)குறித்த கற்கை தொடர்பான  தெளிவான சமய விளக்கங்களை குறித்த துறை  சார்ந்த மவ்லவிமார்  தெளிவுபடுத்த வேண்டும்

2). மிருக வைத்திய துறைக்குத் தெரிவாகும்,மாணவர்களை விஷேடமாக  ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கான நிதி உதவிகளையும் வழங்க முடியும்,
( இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் தனவந்தர்கள் இதனை பொறுப்பேற்க முடியும்)

3). மாடறுப்பு, விற்பனை போன்றவற்றுடன் தொடர்பு பட்டவர்களுக்கு, அத்தொழில் தொடர்பான தெளிவை வழங்கி, குற்றச் செலில் ஈடுபடாதிருக்க உதவுதல்.

4). நவீன Farming முறைகளைப் பயன்படுதி முஸ்லிம் பிரதேசங்களில் மாடு வளர்ப்பை ஊக்குவித்தல்.

போன்ற  முறையான திட்டங்களை முன்வைப்பது, குறித்த முஸ்லிம் சமூகத்தின்" பொறுப்புணர்வு " ( Responbility) சார் நடவடிக்கையே ஆகும், மாறாக  இது தொடர்பில் ஏனையோர்களை குற்றம் சாட்டுவது மட்டும், மாட்டுப் பிரச்சினைக்கான நிரந்தர மாற்றுத் தீர்வைப் பெற்றுத் தராது..

MUFIZAL ABOOBUCKER 
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

மாட்டுப் பிரச்சினையும், முஸ்லிம் மாற்றுத் தீர்வும்... மாட்டுப் பிரச்சினையும், முஸ்லிம் மாற்றுத் தீர்வும்... Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.