கடலால் வரும் பாரிய அழிவுகளைவிட பல மடங்கு பாரிய அழிவுகள் மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்தேக்கங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும்.


2016 ஜூன் ராவய பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி
காலத்தின் தேவை கருதி 

ARM INAS-

வெள்ளம் தொடர்பில் சென்ற வாரம் ராவய பத்தரிகையின் முன்னால் ஆசிரியர் விக்டர் அய்வன் தனது அனுபவமொன்றை கீழ்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.

“நான் சுனாமி தொடர்பிலான செயலமர்வொன்றில் பங்குபற்றிய சமயத்தில். என் பக்கத்தில் இருந்த ஒரு நபர் மகாவெலி திட்டம் தொடர்பில் ஒரு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவ்வேளையில் மிகவும் கவலையுடனும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் அவரை  என்னால் காண முடிந்தது .

சுனாமி தொடர்பிலான செயலமர்விலிருந்து நான் அவரை வெளியே அழைத்துச் சென்று அவர் சொன்ன விடயங்களில் எனது அவதானத்தை செலுத்தினேன். அந்நபர் வேறுயாருமல்ல இலங்கையில் உருவான முதல்தர பொறியாளலர்களில் ஒருவாரான டெனிஸ் பிரநாந்து. அவர் சில காலம் மகாவலி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

மகாவலி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் எதிர்காலத்தில் வரவிருக்கும் அழிவுகளை கருத்தில் கொண்டு தாம் மகாவலி திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்ததாகவும் அவர் அத்திட்டத்தை எதிர்த்ததற்கான காரணத்தையும் எனக்கு விளக்கினார்.

ஒரு முறை அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த JRஜயவர்தன டெனிஸ்பிரநாந்துவை அழைத்து மகாவலி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமைக்கான காரணத்தையும் கேட்டுள்ளார். டேனிஸ்பிரநாந்துவும் ஜனாதிபதி JRஜயவர்தனவும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள். தாம் மகாவலி திட்டத்தை எதிர்பதற்கான காரணத்தை டேனிஸ் அவர்கள் ஜனாதிபதிக்கு சுருக்கமாக விளக்கியுள்ளார்.

மேலும் மலைப்பகுதிகளில் நீர்தேக்கங்களை அமைப்பதாக இருந்தால் பாரிய நீர்தேக்கங்கள் அமைக்காமல் சிரியயளவில் நீர்தேக்கங்கள் அமைக்குமாறு ஜனாதிபதி JRஜயவர்தனாவிடம் டெனிஸ் கேட்டுள்ளார். ஆனாலும் பொறியியலாளர் டெனிஸ் அவர்களின் ஆலோசனையை ஜனாதிபதி JRஜயர்வதன பொருட்படுத்தவில்லை. ஜனாதிபதி ஜயவர்தனவின் திட்டப்படியே பாரிய நீர்தேக்கங்கள் அமைக்கப்பட்டன.

கடலால் வரும் பாரிய அழிவுகளைவிட பல மடங்கு பாரிய அழிவுகள் மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்தேக்கங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என கலங்கிய கண்களுடன் டெனிஸ் அவர்கள் எனக்கு தெரிவித்தார்.

டெனிஸ் சொன்ன விடயங்கள் என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவர் கூறிய விடயத்தின் பாரதூரத்தை இன்னும் சற்றும் ஆழமாக அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் இருக்கும் இத்துறை சார்ந்த சில விஞ்ஞானிகளிடம் சில கலந்துரையாடல்களை நடாத்தினேன். அவர்களும் ஏதோ காணரத்துக்காக இந்த விடயம் தொடர்பில் பெரிதாக பேச விரும்புவதாக தெரியவில்லை.

பொறியலாளர் டெனிஸ் சொன்ன விடயத்தை ஜனாதிபதி JRஜயவர்தன அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது ஏன் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நீர்தேக்கம் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் புவிநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன அப்படியேற்படும் போது அது நீர்தேக்கங்களில் ஏற்படுத்தும் மாற்றம் பாரிய அழிவுகளை கொண்டுவரக் கூடியவை.

இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ள புவியல் தொடர்பில் ஆழமான அறிவு ஏதும் தேவையில்லை. இத்தனை பாரிய அழிவுகளை எதிர்காலத்தில் கொண்டு வரும் என தெரிந்தும் ஜனாதபதி JRஜயவர்தன டெனிஸ் அவர்களின் ஆலோசனையை தூக்கியெறிய காரணம் அத்திட்டத்தை கைவிட்டுவிடுவதால் அவருக்கு ஏற்படும் அரசியல் நட்டமும் அவரின் பிடிவாதமும் தான். என்று விக்டர் அய்வன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

கடலால் வரும் பாரிய அழிவுகளைவிட பல மடங்கு பாரிய அழிவுகள் மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்தேக்கங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும். கடலால் வரும் பாரிய அழிவுகளைவிட பல மடங்கு பாரிய அழிவுகள் மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்தேக்கங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும். Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.