சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு



சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை விரைவில்
ஆரம்பிக்கப் படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாதிப்புக்கள் குறைவாகும். கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காலி மாவட்டத்திற்கு 80 கோடி ரூபாவும், களுத்துறை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாவும்இ மாத்தறை மாவட்டத்திற்கு 150 கோடி ரூபாவும்இ இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

இடர்நிலைமைகள் பற்றி பொதுமக்கள் தொலைபேசிவாயிலாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்க முடியும். இதற்காக அழைக்க வேண்டிய நிலையம். 1902 என்பதாகும். 

தமது வீட்டிற்கோ சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் கிராம உத்தியோகத்தருக்கு பிரதேசத்தைச் சேர்ந்தகள உத்தியோகத்தர்களுக்கோ அறியத் தரலாம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆலோசனை வழங்கினார்.
சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு  சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.