அடை மழை காரணமாக கிண்ணியா பிரதேசமும் பாதிப்பு. (படங்கள்)


திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள்  அடை மழையினால்
வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவின் ஹிஜ்ரா வீதி,ஜாயா வீதி,கச்சக்கொடித் தீவு குட்டியா குளப் பகுதியின் வீட்டுத் திட்டம் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளினுள்ளும்,

வீட்டு குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் இப் பகுதியில் நீர் வடிந்தோடக்கூடிய வடிகாண் வசதிகளின்மையாலும் தங்களது குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம் எனவும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அங்கலாய்க்கின்றனர் சுமார் 500க்கும் மேற்பட்ட குடுப்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.புனிதமிகு றமழான் மாதமாகையால் நோன்பு நோற்பதற்கு ஸஹர் நேரங்களிலும் பல்வேறு அசௌகரியங்களும் இன்றைய இப்தார் நேரத்திலும் தாங்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


அப்பகுதி வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து செய்யமுடியாத நிலையும் காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் போதிய மின் வெளிச்சமின்மையால் போக்குவரத்து தடைப்படுவதாகவும் இரவு நேர தொழுகைகளையும் தங்களது வணக்க வழிபாடுகளில் பங்கு கொள்வதில் போக்குவரத்து தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய அரச அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிவாரணம் வழங்குவதுடன் இயல்பு நிலை திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் மக்கள் உரியவர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
அடை மழை காரணமாக கிண்ணியா பிரதேசமும் பாதிப்பு. (படங்கள்)  அடை மழை காரணமாக கிண்ணியா பிரதேசமும் பாதிப்பு. (படங்கள்) Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.