திகன கலவரத்தை ஏன் தடுக்க முடியவில்லை ; பொலிஸ் ஆணைக்குழுவின் விளக்கம் இதோ..

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரங்களின்  போது போதிய பொலிஸார் இன்மையால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என பொலிஸ் மா அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2018.03.14 அன்று கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளை பொலிஸார் கட்டுப்படுத்த தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்களம் ,கண்டி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , சட்டம் ஒழுங்கு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஐக்கிய சமாதான முன்னணி சார்பாக அதன் தலைவர் ஐ என் எப் மிப்லால் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு  செய்திருந்தார்.

இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு   பொலிஸ் மா அதிபரை மேற்கோள் காட்டி   கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரங்களின்  போது போதிய பொலிஸார் இன்மையால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என ஐக்கிய சமாதான முன்னணி சார்பாக அதன் தலைவர் ஐ என் எப் மிப்லால் மவ்ளவிக்கு விளக்கம் அளித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு இவ்வாறான விளக்கம் ஒன்றை அளித்துள்ள போது குறித்த சம்பவம் நடைபெற முன்னர் பொலிஸ் உயரட்டம் அரசாங்க உயர்மட்டம் ஆகியவற்றிற்கு இது தொடர்பில் முஸ்லிம் தரப்புகள் அறிவுறுத்தி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
 
திகன கலவரத்தை ஏன் தடுக்க முடியவில்லை ; பொலிஸ் ஆணைக்குழுவின் விளக்கம் இதோ.. திகன கலவரத்தை ஏன் தடுக்க முடியவில்லை ; பொலிஸ் ஆணைக்குழுவின் விளக்கம் இதோ.. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5