உ/ த கலைப்பிரிவிற்கான பாடத்தெரிவுகளும், முக்கியமான கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகளும்.


இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரம் செல்லும் பல மாணவர்களுக்கு கல்விசார் உளவள ஆலோசனைகள்
செய்ததன் பிரகாரம், பலருக்கும் இதில் தெளிவின்மை காணப்படுவதால் மேற்படி தலைப்பில் சில முக்கிய விடயங்களை எழுதுவது அவசியமாகிறது.

 கலைப்பிரிவை தெரிவு செய்யும் ஒரு மாணவர், கடந்த 2017/2018 கல்வியாண்டின்படி ஆகக்கூடியது நாற்பது பல்கலைகழக கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

• கலைப்பாடங்களை நான்கு பிரிவாக பிரிக்கின்றனர்.

01. சமூக விஞ்ஞானம்/பிரயோக சமூக கற்கைப் பாடங்கள் (அ)
 பொருளியல்
 புவியியல்
 வரலாறு
 மனைப்பொருளியல்
 அரசியல் விஞ்ஞானம்
 அளவையியலும், விஞ்ஞான முறைமையும்
 கணக்கீடு அல்லது வணிகப் புள்ளிவிபரவியல்
 விவசாயம் விஞ்ஞானம்/கணிதம் /இணைந்த கணிதம்
• தொழிநுட்பவியல் பாடங்களில் ஒன்று (குடிசார் தொ.வி/பொறிமுறை தொ.வி./மின் இலத்திரனியல் etc)
 தொடர்பாடலும், ஊடகக்கற்கைகளும்
 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

02. சமயங்களும், நாகரீகங்களுக்குமான பாடங்கள் (ஆ)
1. பௌத்த சமயம்/பௌத்த நாகரீகம்
2. கிறிஸ்தவ சமயம்/கிறிஸ்தவ நாகரீகம்
3. இந்து சமயம்/இந்து நாகரீகம்
4. இஸ்லாம்/இஸ்லாமிய நாகரீகம்
5. கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்

03. அழகியற் கல்விப் பாடங்கள் (இ)
1. சித்திரம்
2. நடனம்
3. சங்கீதம்
4. நாடகமும், அரங்கியலும்

04. மொழிப்பாடங்கள் (ஈ)
1. சிங்களம், தமிழ், ஆங்கிலம்
2. அரபு, பாளி, சமஸ்கிருதம்
3. சீனம், மலாய், பிரெஞ்சு, ஜெர்மன், ரசியன், ஹிந்தி, ஜப்பான்

இவற்றினை தேர்வதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு,
பிரிவு (அ) வில் காட்டப்பட்டுள்ள சமூக விஞ்ஞான கற்கைகளில் இருந்து குறைந்தது ஒரு பாடமேனும் தெரிவு செய்ய வேண்டும் (மொழிப்பாடங்கள் மூன்றும் எடுப்போருக்கு இது பொருந்தாது). மாணவர்களின் விருப்பத்தின் பிரகாரம் இரண்டு அல்லது மூன்று பாடங்களும் இதிலிருந்து தெரிவு செய்ய முடியும்.

சமயங்களும், நாகரீகங்களுக்குமான பாடங்கள் (ஆ) பகுதியில் யாதேனுமொரு சமயத்தை தெரிவு செய்தால் அதனுடன் தொடர்புடைய நாகரீகத்தை தெரிவு செய்ய முடியாது.

அழகியற் கல்விப் பாடங்கள் (இ) இலும் ஒன்றை அல்லது இரண்டை தெரிவு செய்யலாம். கட்டாயமில்லை.

மொழிப்பாடங்கள் தொடர்பில், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களும் தெரியலாம்.

o சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு, பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றிலிருந்து எவையேனும் மூன்று பாடங்கள் தெரியவும் முடியும்.

மொழிப்பாடங்கள் இரண்டை தெரிவு செய்யும் ஒருவர் மூன்றாவது பாடமாக ஏனைய எந்தத் தொகுதியிலிருந்தும் மிகுதி ஒரு பாடத்தை தெரிவு செய்யலாம்.

(பல்கலைக்கழக வாய்ப்புகளில் பிரதான கற்கை நெறிகள் படம் ஒன்றிலும் மேலதிக கற்கைநெறிகள்
படம் இரண்டிலும் இணைக்கப்பட்டுள்ளன)

32294123_10216685211946969_7737008203602329600_n
கலைத்துறையில் கற்கும் ஒருவர் தகுதி பெறக்கூடிய மேலதிக கற்கை நெறிகளும், பல்கலைக்கழக நிபந்தனைகளும் 
Aபட்டினமும் நாடும் திட்டமிடல் (மொறட்டுவ)
அரசியல் விஞ்ஞானம், புவியியல், விவசாய விஞ்ஞானம், கணக்கீடு, வணிகப் புள்ளிவிபரவியல், இணைந்த கணிதம், அளவையியலும் விஞ்ஞான முறையும், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் ஆகிய கலைப்பாடங்களில் எவையேனும் மூன்று பாடங்கள்.

B. கட்டடக்கலை (மொறட்டுவ)
சித்திரக்கலை, புவியியல், இணைந்த கணிதத்தில் கட்டாயம் ஒரு பாடமும் ஏனைய பாடங்கள் மற்றைய கலைப்பாடங்களாகவும் இருத்தல் வேண்டும்.

C. நவநாகரீக வடிவமைப்பு (மொறட்டுவ)
o ஏதாவது மூன்று பாடங்களுடன் சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானத்தில் திறமைச்சித்தி.

D. நிலத்தோற்ற கட்டிடக்கலை (மொறட்டுவ)
சித்திரக்கலை, புவியியல், இணைந்த கணிதம், விவசாய விஞ்ஞானம் ஆகியவற்றில் குறைந்தது ஒரு பாடமும் ஏனைய பாடங்கள் மற்றைய கலைப்பாடங்களாகவும் இருத்தல் வேண்டும்.
சாதாரண தர கணிதத்தில் திறமைச்சித்தி

E. வடிவமைப்பு (மொறட்டுவ)
o ஏதாவது மூன்று பாடங்களுடன் சாதாரண தர பரீட்சையில் கணிதம், விஞ்ஞானத்தில் திறமைச்சித்தி.

F. சட்டம் (CMB, PDN, JFN)
o கணக்கீடு, விவசாய விஞ்ஞானம், வணிகப்புல்லிவிபரவியல், தொடர்பாடல் ஊடகக்கற்கை, அரசியல் விஞ்ஞானம், புவியியல், வரலாறு, அளவையியல், பொருளியல் தகவல் தொழினுட்பம் ஆகிய பாடங்களில் இருந்து மூன்று பாடங்களோ அல்லது மேலுள்ளவற்றில் இருந்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களும் ஏனையவை ஏதாவது கலைப்பாடமும்.

G. முகாமைத்துவ தகவல் தொழினுட்பம் (SEUSL)
எவையேனும் மூன்று பாடங்கள்

H. தொழில் முயற்சியும் முகாமைத்துவமும (ஊவா)
எவையேனும் மூன்று பாடங்கள்

I. கைத்தொழில் தகவல் தொழிநுட்பம் (ஊவா)
எவையேனும் மூன்று பாடங்கள்

J. விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் (ஊவா)
எவையேனும் மூன்று பாடங்கள்

K. உடற்றொழில் கல்வி (சப்ரகமுவா)
எவையேனும் மூன்று பாடங்கள்

L. விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும (SAB, SJP)
எவையேனும் மூன்று பாடங்கள்

M. பேச்சும் செவிமடுத்தலும் விஞ்ஞானம் (களனி)
கலைப்பிரிவில் ஏதாவது மூன்று பாடங்கள்

N. தகவல் தொழிநுட்பமும் முகாமைத்துவமும் (மொறட்டுவ)
பொருளியல், புவியியல், கணக்கீடு, அளவையியலும் விஞ்ஞானமும் ஆகிய பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்தில் திறமைச்சித்தி
சாதாரண தர ஆங்கிலம், கணிதம் என்பவற்றில் திறமைச்சித்தி

O. தகவல் முறைமைகள் (கொழும்பு)
வியாபரப் புள்ளிவிபரவியல், பொருளியல், கணிதம், கணக்கீடு, அரசியல் விஞ்ஞானம், அளவையியலும் விஞ்ஞானமும், புவியியல், குடிசார் தொழினுட்பம், தகவல் தொழினுட்பம் என்பவற்றில் குறைந்தது இரு பாடங்கள்
சாதாரண தர ஆங்கிலம், கணிதம் என்பவற்றில் திறமைச்சித்தி

P. மொழிபெயர்ப்பு கற்கைகள் (களனி, சப்ரகமுவ, யாழ்ப்பாணம்)
கலைப்பிரிவில் ஏதாவது மூன்று பாடங்கள்

Q. திரைப்படம் தொலைக்காட்சி கற்கைகள் (களனி)
o கலைப்பிரிவில் ஏதாவது மூன்று பாடங்கள்

R. செயற்றிட்ட முகாமைத்துவம் (யாழ்ப்பாணம்)
கலைப்பிரிவில் ஏதாவது மூன்று பாடங்கள்

S. தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பவியலும் (ரஜரட்ட)
கணிதம், கணக்கியல், வியாபார புள்ளிவிபரவியல், பொருளியல், புவியியல், அளவையியலும் விஞ்ஞானமும், சமஸ்கிருதம், குடிசார் தொழினுட்பம், தகவல் தொழினுட்பம் என்பவற்றில் குறைந்தது ஒரு பாடத்திலேனும் திறமைச்சித்தி
சாதாரண தர ஆங்கிலம், கணிதம் என்பவற்றில் திறமைச்சித்தி

T. நிதி பொறியியல் 
o கலைப்பிரிவில் பொருளியல், கணக்கீடு சகிதம் தகவல் தொழினுட்பம், வணிக புள்ளிவிபரவியல், விவசாய விஞ்ஞானம், புவியியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், அளவையியல் விஞ்ஞானம் ஆகியவற்றில் ஒரு பாடம்.

மேற்குறிப்பிடப்பட்ட பல கற்கை நெறிகளுக்கு குறித்த பல்கலைக்கழகங்கள் பொது உளச்சார்பு பரீட்சையின் மூலமும், மாணவர்கள் பெற்றுக்கொண்ட இசட் புள்ளிகள் மூலமுமே மாணவர்களை தெரிவு செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதேபோல உயர்தரத்தில் பொது சாதாரண பரீட்சையில் ஆகக்குறைந்த 30% புள்ளிகள் பெறப்பட வேண்டும்.

எனவேதான் பொருத்தமான கலைப்பாடங்களை தெரிவு செய்வதன் மூலம் அதிக கேள்வியுள்ள, தொழில் சந்தையில் உடனடி தொழில்வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் இலகுவாக உள்நுழைய முடியும்.

வாழ்த்துக்கள்...

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர் 
தென்கிழக்குப் பல்கலைகழகம் 
shiblyfh@seu.ac.lk
உ/ த கலைப்பிரிவிற்கான பாடத்தெரிவுகளும், முக்கியமான கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகளும். உ/ த கலைப்பிரிவிற்கான பாடத்தெரிவுகளும், முக்கியமான கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகளும். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.