மியன்மாரில் இடம்பெற்ற மோதல்... 19 பேர் பலி.

மியன்மார் இராணுவத்திற்கும் பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இன்று நடந்த
மோதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சீன எல்லை அருகே மியன்மாரின் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன.

இந்த நிலையில், மியன்மார் நாட்டு இராணுவத்திற்கும் ”டாங் தேசிய விடுதலை இராணுவம்”   Ta'ang National Liberation Army (TNLA)  என்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.

ஏற்கனவே  மியன்மாரில் ராகீன் பகுதியில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் இன அழிப்பு செய்தது உலகறிந்த கொடுமை .

இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. எனினும், இராணுவத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு இராணுவத் தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே 3 இடங்களில் இராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


Image result for myanmar 19
மியன்மாரில் இடம்பெற்ற மோதல்... 19 பேர் பலி. மியன்மாரில் இடம்பெற்ற  மோதல்... 19 பேர் பலி. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5