இலங்கையர் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டனர்.


இலங்கையர் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேற்றவாசிகள், துருக்கியில் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி செய்த இணையதளமான நியுஸ் ஒன் டர்கி (news on turkey) செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் துருக்கிய கடக்க முற்பட்ட சுமார், 476 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இலங்கையரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

துருக்கி நாட்டின் கிழக்கு எலாசிக் (Elazig) மாகாண எல்லையில் புதிய மனிதர்கள் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, எலாசிக் - பிங்கோல் (Bingol) பிரதான வீதியில் பஸ்ஸில் பயணித்த 22 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத்  தெரியவந்துள்ளது.
இலங்கையர் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டனர். இலங்கையர் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டனர். Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5