பாடசாலை சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்த கடைக்காரரும்... கஞ்சாவை பீடிக்குள் வைத்து புகைத்த சிறுவர்களும். #திருகோணமலை ரொட்டவெவ


(அப்துல்சலாம் யாசீம்)
13 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு பீடி விற்பனை செய்த கடை உரிமையாளரை
எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமொன்று நேற்றுமாலை (16) இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபரொருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடியை வாங்கிச்சென்று பாடசாலை வளாகத்தில் 13வயதுடைய மாணவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் போது மாணவர்களை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.

இதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி. சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

பாடசாலை சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்த கடைக்காரரும்... கஞ்சாவை பீடிக்குள் வைத்து புகைத்த சிறுவர்களும். #திருகோணமலை ரொட்டவெவ பாடசாலை சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்த கடைக்காரரும்... கஞ்சாவை பீடிக்குள் வைத்து புகைத்த சிறுவர்களும். #திருகோணமலை ரொட்டவெவ Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5