சவூதி விபத்து.. இங்கிலாந்தை சேர்ந்த 4 உம்ரா யாத்திரீகர்கள் உயிரிழப்பு. பலர் காயம்.


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் பேருந்து ஒன்று சவூதி
அரேபியாவில் மக்காவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உம்ரா யாத்திரீகர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே சென்ற பேருந்து எரிபொருள் ஏற்றி வந்த லாரி ஒன்றின் மீது மோதியே இப் பேரூந்து விபத்தில் சிக்கியது.


இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.  12 பேர் காயமடைந்தனர்இதனை இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.

காயமடைந்தோர் மக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  

வபாத்தானோரில் தாய் மற்றும் மகனும் அடங்குவர்மற்ற இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்கள் பற்றிய மேலதிக விபரம் இல்லை
சவூதி விபத்து.. இங்கிலாந்தை சேர்ந்த 4 உம்ரா யாத்திரீகர்கள் உயிரிழப்பு. பலர் காயம். சவூதி விபத்து.. இங்கிலாந்தை சேர்ந்த 4 உம்ரா யாத்திரீகர்கள் உயிரிழப்பு. பலர் காயம். Reviewed by Euro Fashions on April 23, 2018 Rating: 5