பாராளுமன்றத்தை புனரமைக்க செலவளிக்கும் 100 கோடியால், 2000 வீடுகளை அமைத்து கொடுக்க முடியுமே.


பாராளுமன்ற கட்டிடத்தை புனரமைக்க 100 கோடிகள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு
மக்கள் மத்தியிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை புனரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது அனாவசியமானது எனவும் மக்கள் பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்தது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அன்றி சொகுசு கொண்டாடுவதற்கல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் தனது அமைச்சுக்கு வழங்கப்பட்டால், 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்
பாராளுமன்றத்தை புனரமைக்க செலவளிக்கும் 100 கோடியால், 2000 வீடுகளை அமைத்து கொடுக்க முடியுமே. பாராளுமன்றத்தை புனரமைக்க செலவளிக்கும் 100 கோடியால், 2000 வீடுகளை அமைத்து கொடுக்க முடியுமே. Reviewed by Euro Fashions on April 23, 2018 Rating: 5