இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.


கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத
அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. .
கடந்த 08 ஆம் திகதி அதிகாலை, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். 
கைது செய்யப்பட்டதோடு, இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 08 பேர் வெவ்வேறு தினங்களில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய சந்தேகநபர்களான குறித்த சந்தேகநபர்கள் 10 பேரும் அவசரகால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. Reviewed by Euro Fashions on April 23, 2018 Rating: 5