கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்? H.ராஜா


ஜம்மு காஷ்மீர் இல் சிறுமி ஆசிபா வன்புனர்வு செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்
தொடர்பில் முழு உலகும் கண்டனத்தை பதிவிட்டு வருவது அறிந்ததே.

கோயிலில் அடைத்து வைத்து வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும் என்று   பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா பேசி உள்ளார். 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்? H.ராஜா கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்? H.ராஜா Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5