ஆனமடுவ மதீனா ஹோட்டலை தீக்கிரையாக்கிய 7 பேர் கைது. அனைவரும் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.


ஆனமடுவ நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டை வீசிய சம்பவம் தொடர்பில்,
7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலால் குறித்த ஹோட்டல் தீயால் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த ஹோட்டலுக்கு அருகிலிருந்த வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ மதீனா ஹோட்டலை தீக்கிரையாக்கிய 7 பேர் கைது. அனைவரும் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள். ஆனமடுவ மதீனா ஹோட்டலை தீக்கிரையாக்கிய 7 பேர் கைது. அனைவரும்  19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள். Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5