பேஸ்புக்கில் இனவாதம் கக்கிய பாடசாலை மாணவன் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் அடைப்பு.


அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இனங்களுக்கிடையே
நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்களின் மூலம் போலி பிரச்சாரங்களை மேற்கொண்ட பாடசாலை மாணவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவரை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.


குறித்த வழக்கில் மாணவர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மூலம் பிணை கோரப்பட்டிருந்த போதும் பிணை வழங்க முடியாது என நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் இனவாதம் கக்கிய பாடசாலை மாணவன் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் அடைப்பு. பேஸ்புக்கில்  இனவாதம் கக்கிய பாடசாலை மாணவன்  எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் அடைப்பு. Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5