ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை.


2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து
எனது சகோதரர்களான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனோ அல்லது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடனோ இதுவரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதல் ஒன்றிற்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு,

ஆரம்பத்தில் நான் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறஉள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தாலும், அது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் கால அவகாசம் இருக்கிறது. தற்போது அது தொடர்பில் பேசுவது முற்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும்.

ஜனாதிபதி வேட்பாளரை  நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார்.  அதுபோல,நாட்டின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் தெரிவு செய்வார்கள்.” என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. Reviewed by Madawala News on March 10, 2018 Rating: 5