கண்டியில் பாதிக்கபட்ட மக்களுக்காக 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதி சேர்த்த ஒலுவில் மக்கள்.


கண்டி மாவட்டத்தில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் சேகரிக்கும் நிகழ்வு
இன்று ஒலுவில் பிரதேசத்திலும் இடம்பெற்றது.

ஒலுவில் ஜம்இய்யத்துல் உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிவாரணங்கள் சேகரிக்கும் சமூகப் பணியில் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் , நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைசேகரித்தனர்.

இந்த மாபெரும் சமூகப்பணியான நிவாரணப்பணியில் இதுவரையில் 805362.00. ரூபாய் சேகரிக்கப்பட்டதுடன் இந்தப் பணம் கண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரிய முறையில்கையளிக்கப்படவுள்ளது.


ULM. சஃபான் (teletamil)
கண்டியில் பாதிக்கபட்ட மக்களுக்காக 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதி சேர்த்த ஒலுவில் மக்கள். கண்டியில் பாதிக்கபட்ட மக்களுக்காக 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதி சேர்த்த ஒலுவில் மக்கள். Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5