எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோஉங்களில் எத்தனை பேருக்கு இதனைப் பற்றித் தெரியும்?

உங்களில் எத்தனை பேர் இதனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கண்டு வாசித்து இருப்பீர்கள்?

எத்தனை பேர் இதனைப் பற்றி விமர்சித்து இருப்பீர்கள்?

எத்தனை பேர் ஏசிப், பேசி இருப்பீர்கள்?

எத்தனை பேர் ஏளனமாக சிரித்து, நையாண்டி பண்ணி காலத்தை, நேரத்தை வீண் அடித்திருப்பீர்கள்?

எத்தனை பேர் இது ஆதாரபூர்வமானதா அல்லது எவ்வித ஆதாரமும் அற்றதா என தேடி இருப்பீர்கள்?

ஆம் , 'Tesla' நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த 'Optimus robot' ஒரு மனித உருவ ரோபோ(Humanoid) ஆகும்,

அதாவது மனிதனைப் போன்று இரண்டு கால்களால் நடக்கவும், இரண்டு கைகளால் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடவும் முடியுமான ஒரு ரோபோ ஆகும். டெஸ்லா நிறுவனம் ஆப்டிமஸை தமது நிறுவனத்தின் கார்களுடன் ஒப்பிட்டுள்ளது. சக்கரங்களில் ரோபோக்களை உருவாக்குவதிலிருந்து மாறி கால்கள் கொண்ட ரோபோக்களை உருவாக்குவதற்கு நிறுவனம் மாறிவிட்டதாகக் கூறியுள்ளது.

Optimus Gen-2 ஏனைய ரோபோக்கள் போன்று வெறுமனே நடக்கவும், பேசவும் முடியுமான சாதாரண ரோபோ என்ற நிலையைத் தாண்டி மேம்படுத்தப்பட்ட நடை வேகம், கை அசைவுகள், கால் அசைவுகள், விரல்களின் தொட்டுணரக்கூடிய உணர்திறன் உடைய பல வகையான மிகவும் நுட்பமான பணிகளைச் செய்ய முடியுமான ஒரு பயனுள்ள ரோபோவாக இருக்கும் என Elon Musk கூறியுள்ளார்.

கடந்த கால ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் Optimus, மனிதர்கள் ஏற்கனவே செய்யக்கூடிய வேலைகளை கற்றுக்கொண்டு, பிற இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கும், மேசையில் உட்காருவதற்கும், பலருக்கும் பயிற்சியளிக்கப்படுவதற்கும் இன்னும் பல வேலைகளை மிகவும் நுணுக்கமாக செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 இல் வெளிவர இருக்கும் 'Tesla Bot Optimus Gen 3' இன்னும் எவ்வளவோ மேம்பட்டதாகவும் ஒரு காரை விடவும் விலை குறைந்ததாகவும் இருக்கும் என மஸ்க் அறிவித்துள்ளார். இவ்வளவு காலமும் மனிதர்களுடன் போட்டி போட்டுக்கொண்டும், வேலை செய்து கொண்டும் வந்த எமக்கு புதிய Challenge காத்திருக்கிறது! ரோபோக்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் போகுது! எங்களுக்கு ?

Tesla, SpaceX, X , The Boring Company, Neuralink, xAI ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரனாக இருக்கும் Elon Musk
உலகின் நம்பர் 1 பணக்காரர் லிஸ்ட் இல் இருந்து கொண்டு தமது பணத்தை, அறிவை, நேரத்தை , காலத்தை அதி நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களில் முதலீடு செய்து வருகிறார். முழு உலகமும் சேர்ந்து செய்ய முடியாத வேலைகளை தனியாக இருந்து செய்து வருகிறார்.

ஒரு தனி மனிதனால் எவ்வளவு சாதிக்க முடியும்?

ஹரீஸ் ஸாலிஹ்
17.04.2024

எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோ எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோ Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.