'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது.'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை சமூக வலைதளங்களில் திரித்து பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் வாரியபொலவில் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூத்த கலைஞர் ரோஹன பெத்தகே ரன்வல படையினருடன் இணைந்து பாடிய இந்த பாரம்பரிய புத்தாண்டு பாடலை சிதைத்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தலத்துஓயாவைச் சேர்ந்த 31 வயதுடைய கலால் அதிகாரி ஒருவரைக் கைது செய்யும் நோக்கில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேக நபர் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்


'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது. 'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.