IPL அணி உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைப்பது எவ்வாறு ? தொடர்ந்து தோற்றுவரும் RCB அணி உரிமையாளர் கூட கோடிகளில் வருமானம் பார்ப்பது எப்படி?



IPL அணி உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைப்பது எவ்வாறு⁉️
வெற்றி, தோல்வியை பொறுத்து பங்குப் பணத்தை பிரித்துக் கொள்கிறார்களா ?

Indian Premier League (IPL) போட்டிகளின் 17வது சுற்றுத் தொடர் 2024இல் நடைபெற்று வருகிறது.

பல நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அணிகளை வாங்கி இதில் முதலீடு செய்து வருகின்றனர்.

2022 கணக்கெடுப்பின்படி IPL Brandன் பெறுமதி 10.7 Billion அமெரிக்க டொலர்களாகும்.

BCCIஇன் அறிக்கையின் படி 2021 IPL Season 1150 கோடி இந்திய ரூபாய்களை நிகர வருமானமாக பெற்றுத் தந்துள்ளது. (182 million USD to the GDP of the Indian Economy)

கோடிகளில் புரளும் ஐபிஎல் போட்டிகளில் IPL அணி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானங்களை நோக்குவோம்.

✅ 01. Media Rights ஒளிபரப்பு உரிமம் (60 - 70% வருமானம்)

IPLஇன் பிரதான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையாளராக Sony India ஒரு தசாவதற்கும் மேல் செயற்பட்டு வந்தது. பின்னர் Dream11. தற்போது Tata Group.

Disney + Hotstar 2022முதல் உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர்களாக உள்ளனர்.

2023இல் ஒளிபரப்பு உரிமையை Star India நிறுவனம் 23,758 கோடி இந்திய ரூபாய் களுக்கு வாங்கியது.
(அதாவது ஒரு போட்டி ஒளிபரப்ப 60.18 கோடி இந்திய ரூபாய்கள்)

ஒளிபரப்பு நிறுவனங்கள் தான் முதலீடு செய்த பணத்தை இலாபத்தோடு சேர்த்து விளம்பர அனுசரணைகள் மற்றும் பார்வையாளர்களின் Subscription ஊடாக பெறுகின்றனர்.

60-70% ஆன IPL வருமானம் ஒளிபரப்பு உரிமம் ஊடாகவே பெறப்படுகிறது. இதன் பெரும் பங்கு BCCIக்கு செல்ல குறிப்பிட்ட சதவீதம் IPL அணி உரிமையாளர்களுக்கு அவர்களது Value அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

✅ 02. Ticket Sales / Gate Revenue (10%)
டிக்கெட் விற்பனை வருமானம்:

இது IPL அணி உரிமையாளர்களுக்கு நேரடி வருமானம் கிடைக்கும் மற்றுமொரு முறை. ஒவ்வொரு அணி உரிமையாளருக்கும் ஆகக் குறைந்தது 7 Home Matches கிடைக்கும். அதில் எந்த அளவு தமது ரசிகர்களை கூட்டி டிக்கெட் விற்பனையை அதிகரிக்கிறார்களோ அந்த அளவு வருமானம் கிட்டும்.

இம்முறை IPL டிக்கெட் விலைகள் விண்ணை தாண்டுவதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

✅ 03. Merchandising - விற்பனை பொருட்கள்:

தமது அணியின் T - Shirts, Caps மற்றும் இன்னோரன்ன நினைவுச் சின்னங்களின் விற்பனை ஊடாக உரிமையாளர்கள் வருமானம் பெறுகின்றனர்.
இதன் மூலம் வருடாந்தம் 30 million USD வருமானமாக பெறப்படுகிறது.

✅ 04. பங்குகள் விற்பனை:
IPL அணி உரிமையாளர்கள் தமது அணி உச்சத்தில் இருக்கும்போது அதன் பங்குகளை நல்ல விலைக்கு விற்று இலாபம் பார்க்கின்றனர்.

Delhi Daredevils அணி உச்சத்தில் இருக்கும்போது அதன் 50% ஆன பங்குகளை 550 INR கோடிகளுக்கு Jindal Steel Works நிறுவனத்துக்கு விற்பனை செய்து அணியின் பெயரை Delhi Capitals ஆக மாற்றியது.

✅ 05. Sponsorship: விளம்பரங்கள்:
மைதானத்துக்குள் தோன்றும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது.

அது Boundary எல்லையில் இருக்கும் Boadகளாகட்டும் Bat, bail, அணியும் ஆடைகள் என பட்டியல் நீண்டது.

ஒரு வீரர் அணியும் ஆடையில் சராசரியாக 10 விளம்பர Logoக்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
Jersey - 6
Pants - 2
Cap - 2
மேலும் இவற்றை வைத்து Print மற்றும் டிஜிட்டல் மீடியாக்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இது போக ஒவ்வொரு அணியினதும் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் பல விளம்பரங்கள் செய்யப்பட்டு அவற்றின் வருமானங்களும் அணி உரிமையாளர்களுக்கு செல்கின்றன.

✅ 06. Prize money - பரிசுத் தொகை:
அணி உரிமையாளர்களுக்கு நேரடி வருமானத்தை தரும் மற்றும் ஒரு முறை.

2023இல்
Title Winner - 20 கோடி இந்திய ரூபாய்கள்
Runner Up - 13 கோடி INR
3rd - 7 கோடி INR
4th - 6.5 கோடி INR

இத்தொகை அணி உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஏனைய வருமானங்களுடன் ஒப்பிடும் போது இது peanut 🥜 தான்.

ஆக அணி தோற்றாலும் RCB போல் அதன் கெத்தை Maintain பண்ணுவதே வருமானத்தை அதிகரிக்கும் ஒரே வழி.

✅ 07. Brand Value:
இது விளம்பரதாரர்களை கவரவும் அணியின் Marketஐஅதிகரிக்கவும் உதவும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் ஒரு வீரரை அவரது Performanceஐ பார்க்காமல் அணியில் வைத்திருப்பது இதற்காகவே.

ஒரு அணியில் Virat Kohli, MS Dhoni, Rohit Sharma போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பது அதன் Brand Valueவை அதிகரிக்கும்.

ஒரு அணி தொடரில் நன்றாக Perform பண்ணுவதால் மாத்திரம் அதன் Brand Value அதிகரித்துவிடாது. ரசிகர்களை கவரும் வீரர்களையும் கொண்டிருக்க வேண்டும்.

ஆக Dhoni இன்னும் பல வருடங்கள் விளையாடுவார்.

✅ 08. விற்கப்படாத பங்குகள்:
(Unlisted Shares)
சில அணிகள் தமது குறிப்பிட்ட சதவீத பங்குகளை பங்குச்சந்தை வியாபாரம் போல் விற்பனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதனை ரசிகர்களே வாங்கி விற்க முடியும்.
உதாரணமாக Chennai Superkings அணி.

தமிழில்: Ziyad Aia
தகவல் மூலம்: stratuptalky
ஏனைய மூலங்கள்: India times, BCCI ,IPLT20

🛑🛑 முடிவுரை:
IPL Brand என்பது பல கோடிகள் புரளும் விற்பனை பண்டமாகும்.

இங்கு பிரதான விளம்பர அனுசரையாளர்கள் என பல சூதாட்ட நிறுவனங்களே நிற்கின்றன. இவையே உலக கிரிக்கெட்டையும் ஆளுகின்றன.
(Eleven, XI என்பவை இவற்றின் பெயர்களில் இருக்கும்.)

IPL இந்தியாவுக்கு நேரடி வருமானம், சுற்றுலாத்துறை மற்றும் IPLஐ ஒட்டிய ஏனைய வியாபாரங்கள் , சேவைகள் போன்ற பல்வேறு விதங்களில் வருமானத்தை பெற்று தருகிறது.

என்னதான் ஏனைய நாடுகள் லீக் போட்டிகள் நடத்தினாலும் இந்திய வீரர்கள் இல்லாமல் அவர்களால் உச்சத்தை தொட முடியாது.
அதிலும் கிறிக்கெற்றுக்கு இந்தியாவில் இருக்கும் Craze வேறெங்கும் கிடையாது.

IPL எனும் BRANDஐ Maintainபண்ண இந்தியா தமது வீரர்களை ஏனைய League போட்டிகளுக்கு அனுப்புவதற்கு பல தடைகளை விதித்துள்ளது.

IPL போட்டிகளுக்கு ஏனைய நாட்டு வீரர்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற பிரபலமான வீரர்களை Coach ஆகவும், Manager, Advisor என்ற பல பெயர்களிலும் இன்னும் சிலர் என்ன பதவி என்றே தெரியாமல் Benchஇல் உட்கார்ந்து இருப்பதையும் காண முடிகிறது.

ஆக ஒவ்வொரு நாட்டினதும் தலைசிறந்த வீரர்கள், அந்நாட்டின் கிரிக்கெட்டை வழிநடாத்தும் கைகள் IPL இன் காலடியில் கிடக்கிறார்கள்.

IPL வருமானத்தில் ஒரு பகுதி ICCக்கு கிடைக்கிறது.
இது போக IPL போட்டிகளுக்கு தமது வீரர்களை வழக்கும் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் BCCI வருமானத்தில் குறிப்பிட்ட பங்கை வழங்குகிறது.

ஆக இந்த IPL கிரிக்கெட் உலகையே ஆளுகிறது.

IPL போட்டிகள் உலக கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே மோசமாக்கி வருவதாக பல விமர்சனங்கள் எழுத போதும் IPL போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

IPL இருக்கும் வரை உலக கிரிக்கெட்டில் இந்தியா வைப்பதுதான் சட்டம். அதுவே சாசனம்.

#ziyadaia
#IPLT20
#ipl2024
#IPLAuction
#msdhoni
#iplrevenue
IPL அணி உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைப்பது எவ்வாறு ? தொடர்ந்து தோற்றுவரும் RCB அணி உரிமையாளர் கூட கோடிகளில் வருமானம் பார்ப்பது எப்படி? IPL அணி உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைப்பது எவ்வாறு ? தொடர்ந்து தோற்றுவரும் RCB அணி உரிமையாளர் கூட கோடிகளில் வருமானம் பார்ப்பது எப்படி? Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.