ஒலுவில் வரலாற்றில் முதல் முறையாக சம்சுதீன் ஹாசீக் இருவேறு தேசிய பரீட்சைகளில் சித்திஒலுவில் வரலாற்றில் முதல் முறையாக சம்சுதீன் ஹாசீக் இருவேறு தேசிய பரீட்சைகளில் சித்தி
20,APRIL 2024


ஒலுவில் பிரதேசத்திலிருந்து வரலாற்றில் முதல் முறையாக இம்முறை வெளியாகியுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை SLAES பரீட்சையில் சம்சுதீன் ஹாசீக் ஆசிரியர் சித்தியடைந்துள்ளார்.

இவர் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரம் வரையில் கமு/அக்/அல்-ஹம்றா தேசிய பாடசாலையில் பயின்றுள்ளதுடன்.இதன் பின்னர் முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2014ஆம் ஆண்டு காணிப் பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் சிறிது காலம் கடமையாற்றினார்.

2013ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளதுடன்,
2014இல் சப்பரகமுவ மாகாண பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் தல்துவை அவிசாவளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாவது பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொண்டார்.அத்தோடு 2017 தேசிய கல்வி நிருவாகத்தில் PGDE கற்கையும்,2023 இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் MEd கற்கையும்,இரண்டாம் மொழி தேர்ச்சியையும் நிறைவு செய்துள்ளார்.

2021(2023)இலங்கை கல்வியாளர் சேவை (SLTES) இரண்டாம் மொழி தமிழ் நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளதுடன்,நேற்றைய தினம் வெளியாகியுள்ள 2021(2023)
இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) பரீட்சையிலும் சித்தியடைந்து விசேட பதவியணி-தமிழ் நேர்முகத்தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தற்போது ஒலுவில் கமு/அக்/அல்-ஹம்றா தேசிய பாடசாலையில் உயர்தர தமிழ்மொழிப் பாட ஆசிரியராக கடமையாற்றும் இவர்
SLTES மற்றும் SLEAS நியமனப் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு பிரகாசமாக காணப்படுவதால் பிரதேச வரலாற்றில் முதல் முறையாக குறித்த துறைசார் அதிகாரியாக மிளிரும் வாய்ப்பு காணப்படுகிறது.

-ரமீஸ் எம் லெவ்வை
ஒலுவில் வரலாற்றில் முதல் முறையாக சம்சுதீன் ஹாசீக் இருவேறு தேசிய பரீட்சைகளில் சித்தி ஒலுவில் வரலாற்றில் முதல் முறையாக சம்சுதீன் ஹாசீக் இருவேறு தேசிய பரீட்சைகளில் சித்தி Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.