பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது.



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் திரு.அசோக பண்டார தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம், பால் மாவின் விலையை 400 கிராமுக்கு ரூ.60 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.150 ஆகவும் குறைக்க, பால் மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.


அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று (24) அறிவித்தது அறிந்ததே


இதன்படி, இறக்குமதி செய்யப்படும்,

ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 250 முதல் 350 ரூபா வரையிலும்,

400 கிராம் பால் மா பொதியின் விலை 100 முதல் 140 ரூபா வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிக்கைக்கும் பால் பவுடர் இறக்குமதியாளர் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்

பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது. பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது. Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.