உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி



( அஷ்ரப் ஏ சமத்)

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி 24 பி.பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு அவர் உரையில் ......

ஈரான் நாட்டின் புரட்சித் தலைவர் தனது தலைவர் காலம் சென்ற இமாம் கொமெயினி அவர்கள் காலத்தில் 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன் நாடு விடுவிக்கப்பட வேண்டும் என அன்றே அவர் பலஸ்தீன் பூமிக்கும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார்

.

இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரவேலர்களான சியோனிஸ்ச வாதிகள் செயல்படுகின்றார்கள் இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் வயதானவர்களை கொலை செய்து வருகின்றனர். .இதற்காக அமெரிக்கா துனை நிற்கிறது. இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது

ஆனால் எங்களது நாடான ஈரான் இந்த உலகில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் ,பொறியியல், நீர் மின்சாரம் போன்ற துறைகளில் உலகின் மேலோங்கி நிற்கும் நாடாக நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

உலகில் 20 நாடுகளுக்கு மேல் எமது நீர் மின்சாரம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் எமது திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அங்கமாகவே உங்களது நாட்டில் நட்புறவாக இத் திட்டத்தினை அங்குராப்பணம் செய்த திட்டமாகும்.அத்துடன் எங்களது விஞ்ஞான வளர்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இந்த உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் சுதந்திரமாகவும் அவரவர்களது இறையாண்மைக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந் நாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எத்தனிக்கின்றன அதற்காக சில யுக்திகளை கையாண்டு யுத்தங்களையும் நாடுகளுக்கிடையே பிணக்குகளும் ஏற்படுத்துகின்றனர்.

பலஸ்தீன் நாட்டுக்கு அந்த மக்களுக்கு நடைபெறும் அநியாயங்கள் அழிவுகளை அமேரிக்கா ஆதரவளித்து உதவியும் வருகிறது.

ஈரானின் அபிவிருத்திகளையும் ஏனைய நாடுகளுடன் ஈரான் நட்பாக இருப்பது நமது எதிரிகள் வேறு கோணத்தில் அவதானிக்கினறனர்.

8 வருடங்களாக ஈரான்- ஈராக் யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்த்தினால் பலர் அழிந்தார்கள் அத் யுத்தினால் அவர்கள் வெற்றியடையவில்லை.

ஈரான் ஜனாதிபதி புதன்கிழமை 24 மஹ்ரிப் தொழுகைக்காக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்தார்.. அவர் பள்ளிவாசலில் மக்களோடு மக்களாக சகலருக்கும் கைகொடுத்து சலாம் சொல்லிக் கொண்டார்.

அத்துடன் அவர் இமாமாக நின்று மஹ்ரிப் தொழுகையை அங்கு நிறைவேற்றினார் அவர் பின் நின்று அவருடன் வருகை தந்த பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள், ஈரான் துாதுவர் உட்பட தொழுகையை நிறைவேற்றினார்கள்...

..

இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நுாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் அத்துடன் வெளிநாட்டு அமைச்சர் அலி சபறியும் ஈரான் இலங்கைக்கு உதவியதையும் 3 மாதங்களுக்கு முன்பே நானும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவும் , ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு வந்து உமா ஓயா திட்டத்தினை திறந்து வைப்பதற்காக அழைப்பு விடுத்தோம். பலஸ்தீன் நாட்டின் சார்பாகவே இலங்கை செயல்பட்டு வருகின்றமையும் அலி சப்ரி அங்கு உரையாற்றினார்

உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.