பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்புபல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் :

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..


பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்நுளைந்துள்ளார்


இதனை அவதானித்த மாணவி ஒருவர் கூச்சலிட்டு சத்தம் போட்டதும் குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்


குறித்த சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்


இதேவளை குறித்த மாணவி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தகவலை வழங்கியிருந்த நிலையில் மறுநாள் அம்மாணவியின் தாயார் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு  பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.