ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு !நூருல் ஹுதா உமர்
ஏறாவூர் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளுக்கான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புணரமைப்பு தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான அலி சாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் ஏறாவூர் நகர சபை தவிசாளருமான எம்.எஸ். நளீம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், ஏறாவூர் நகரசபை வேட்பாளர்களான ஏ. சீ.எம். நிபாத், ஜே.அகமட் லெப்பை, எஸ்.எம்.ஜப்பார், எம்.ஆர்.ரஜாய், எம்.கே.எம். மனாப், ஆர்.எம். உவைஸ், யூ.எல்.எம்.ரிபாத், நிசார், ரகுமான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சீ.அசனார் லெப்பை, எம்.பீ.எம்.ஏ.சக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு ! ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு ! Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.