முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை நான் செய்யவும் இல்லை, வத கொத்து- வத ரொட்டி போன்ற விடயங்களை நான் ஒருபோதும் கூறவும் இல்லை; ரத்ன தேரர்



எமது எதிர்க்கட்சி நண்பர், சிங்கள மக்களுடன் அதிகமாக பழக கூடிய கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் அவர்கள் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் விடயத்தை நான் தான் அதிகமாக இழுத்தேன் என்று கூறி உள்ளார்.

ஷாபி ஷிஹாப்தீன் விடயம் பொய்யா?
வழக்கு முடிந்து விட்டதா? இல்லை.
நீதவான் நீதிமன்றில் இன்னும் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சியில் பேசும் அனைவரும் ஷாபி ஷிஹாப்தீனை சுத்தப்படுத்தவே பார்க்கிறார்கள்

அவரின் வழக்குகளில் இருந்து அவர் நிரபராதி ஆவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும்
இல்லை ஆனால் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதில் தொடர்பு பட்ட வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுத்தவாளியாக்க முடியாது. அது அடிப்படை வாதமாகும்.

சஹ்ரான் போன்றவர்கள் குண்டு வெடிக்கும் போது, ஷாபி ஷிஹாப்தீன் போன்றவர்கள் குற்றம் செய்ய மாட்டார்களா?

சாபி ஷிஹாப்தீன் குற்றவாளியா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் சுமார் ஒன்பது 900 தாய்மார் அவருக்கு எதிராக சாட்சி கூறியுள்ளார்கள்.

சாட்சி கூறியுள்ள தாய்மார் சிலருக்கு தற்போது குழந்தை கிடைத்து இருக்கலாம் ஆனால் அது பற்றி விசாரிக்க வேண்டியது என் வேலை அல்ல.

அதனால் இந்த நாட்டில் நாம் இனவாதத்தை பரப்புவதாக பொய்யாக கூறிக் கொண்டிருக்காமல் இந்நாட்டிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் வேலை திட்டங்களை முன்னெடுக்கவும்.

முஸ்லிம் மக்களை பயங்கரவாதத்தில் தள்ள நாம் தயாராக இல்லை.

வத கொத்து வத ரொட்டி போன்ற விடயங்களை நான் ஒருபோதும் கூறவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை பரப்பும் அரசியலை நாம் ஒருபோதும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் தெரிவித்தார்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை நான் செய்யவும் இல்லை, வத கொத்து- வத ரொட்டி போன்ற விடயங்களை நான் ஒருபோதும் கூறவும் இல்லை; ரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை நான் செய்யவும் இல்லை, வத கொத்து- வத ரொட்டி போன்ற விடயங்களை நான் ஒருபோதும் கூறவும் இல்லை; ரத்ன தேரர் Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.