சிவனொளிபாத மலையில் இருந்து குதித்து மாயமான இளைஞன், 3 நாட்களின் பின்னர் இன்று உயிருடன் மீட்புசிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அங்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞனை சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
சிவனொளிபாத மலையில் இருந்து குதித்து மாயமான இளைஞன், 3 நாட்களின் பின்னர் இன்று உயிருடன் மீட்பு சிவனொளிபாத மலையில் இருந்து குதித்து மாயமான இளைஞன், 3 நாட்களின் பின்னர் இன்று உயிருடன் மீட்பு Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.