நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்புநாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ​​ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார்.


தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர்களுக்கு இடையே நடக்கும் நிக்காஹ் சடங்குகள் செல்லுபடியாகும் திருமணமாக கருதப்படுமா என்று விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த மதகுரு, "ஆம், நிச்சயமாக, இரண்டு சாட்சிகளுடன் ஒரு தொலைக்காட்சி நாடகக் காட்சியில் நிக்காஹ் நடத்தப்பட்டால், அது சரியான திருமணமாக கருதப்படும் என பதில் அளித்தார்.

அறிஞரின் கூற்றுப்படி, இரண்டு நடிகர்கள் ஒரு நாடகத்தில் நிக்காஹ் காட்சியை நடித்தால், அவர்களின் திருமணம் உண்மையில் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.

மத அறிஞரின் கூற்று பரவலான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர்.


நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு Reviewed by Madawala News on March 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.