கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை . கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதமையால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை .  கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை . Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.