வேலைகளை முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு.



⏩ வேலைகளை முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களை விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு...


⏩ பாதியில் முடிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது...  

         

        நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 


வேலைகளை நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


இந்த வருடத்துக்குள் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.


கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் ஏற்கனவே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


அநுராதபுரம் மாவட்டத்தில் அறுதி உறுதிப்பத்திரங்கள் மற்றும் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை (10) கலந்து கொண்டு அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய மாகாண ஆளுநரின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மஹிபால ஹேரத் தலைமையில் அனுராதபுரம் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இங்கு 46 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களும், 250 பயனாளிகளுக்கு 115 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்பு கடனுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அறுதி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது இவ்வருட இறுதிக்குள் 2000 அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,


“கடந்த காலங்களில் காணி உரிமை வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமை இல்லை. 1980/90 ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான வீடுகளின் உரிமையை தீர்த்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.


எமது மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த காணி சொந்தமாக இல்லாததால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக, உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றியமைக்க காணி அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டது. அப்போது கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே காணி உரிமை வழங்கப்படும் என நம்பினோம்.


அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் உறுதிப்பத்திரங்கள் வழங்குவதை கட்டுப்படுத்தாமல் எமது பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தியமைக்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேலைத்திட்டம் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகும்.


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு உதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போதைய அரசு நிதியமைச்சின் திறைசேரி மற்றும் பிற அமைச்சுகளுடன் இணைந்து, வீட்டு உதவி மற்றும் பில் செலுத்தும் முறைக்கான திட்டங்களைத் தயாரித்தது. போதுமான வருமானம் பெற புதிய நிகழ்ச்சி நிரலில் பணியாற்றினர். அதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு, அப்போது நிறுத்தப்பட்டிருந்த வீட்டு உதவித் திட்டத்தின் எஞ்சிய நிதியை வழங்குவதற்குத் தேவையான முன்னுரிமையை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். 


தற்போதைய வட்டி விகிதத்தை விட குறைந்த வட்டியில் மக்களின் வீட்டுக் கனவை நனவாக்குவதற்கு தேவையான வசதிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. பயனாளிகள் கடன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.


பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள எங்களுக்கு ஒரு வருடம் பிடித்தது. வரலாற்றில் பொருளாதார நெருக்கடிகளால் துண்டாடப்பட்ட வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். சமூக, அரசியல் ஸ்திரமின்மை இருந்த காலத்தில் இப்படி ஒரு எழுச்சியை செய்த நாடு வேறெதுவும் இல்லை. அங்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவை வழங்கினர். மக்களிடம் விமர்சனம் இருந்தது. நாங்கள் எடுத்த முடிவுகளால் சங்கடப்பட்டோம். ஒரு வேதனையான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதை சகித்துக்கொண்டு நீண்டகாலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனர். அந்த ஆதரவின் விளைவே 18 மாதங்களுக்கு முன்பிருந்த பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் சாதகமான நல்ல பொருளாதார நிலை உருவாகியுள்ளது. இது தொடர்ந்து பலப்படுத்தப்படும், மேலும் இந்த திட்டத்தில் பின்வாங்க முடியாது. தற்போது நாட்டில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தின் நன்மைகளை கீழ்மட்டத்திற்கு கொண்டு செல்லும் அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நிலையும், அசௌகரியங்களும் எதிர்காலத்தில் படிப்படியாக மறைந்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.


பெப்ரவரி 15 ஆம் திகதி, அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்காக பொருத்தமான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.



முதல் தடவையாக அஸ்வெசும அமுல்படுத்தப்படும் போது ஆளுநர்களும் மாகாண சபையும் வேலைத்திட்டத்தில் ஈடுபட முடியாமல் போனது. 28 ஆண்டுகால முறைகள் மாறிவிட்டதால், எங்களுக்கு இப்போது அவர்களையும் இதில் ஈடுபடுத்தலாம். அனைத்து மாகாணசபையின் ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களின் ஆதரவைப் பெற்று பொருத்தமான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அதனை உறுதிப்படுத்திய பின்னர் ஜூன் மாதத்திற்குள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்பார்க்கிறோம். அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. "


இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் எம். நந்தசேன, வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரகோன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, பணிப்பாளர் சபை உறுப்பினர் கவேஷ சனிரத்ன, பொது முகாமையாளர் கே.ஏ. ஜானகா, பிரதி முகாமையாளர்கள், மாவட்ட முகாமையாளர் ஜே.ஏ.ஏ. பிரசன்ன, அனுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) சந்தயா அபேசேகர உள்ளிட்டோரும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்

முனீரா அபூபக்கர்

வேலைகளை முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு. வேலைகளை முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு. Reviewed by Madawala News on February 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.