கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது.வானில் ட்ரோன் பறக்க விட்ட இளைஞன் கைது!

பாருக் சிஹான்

❇️கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு ட்ரோன் விமானத்தை அனுமதியின்றி பறக்க விட்ட பல்கலைக்கழக மாணவனை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.

❇️புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் 22 வயதான மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

❇️இந்த இளைஞன் ரயில் நிலையத்திற்கு அருகில் ட்ரோன் விமானத்தை பறக்க விட்டுக்கொண்டிருந்த போது, பம்பலப்பிட்டி ஓஷன் டவரில் அமைந்துள்ள விமானப்படை காவலரணை சேர்ந்த படையினர், அவரை கைது செய்துள்ளனர்.

❇️பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை கொண்டாடுவதற்காக ட்ரோன் விமானத்தை வானில் பறக்க விட்டதாக மாணவன், விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

❇️கைது செய்யப்பட்ட மாணவன் ட்ரோன் விமானத்துடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

**🤝
கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது. கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.